அமில மழை உண்டாக்கிய பாதிப்பு என்ன? எப்படி தடுக்கப்பட்டது? - ஓர் உண்மை கதை

இயற்கைக் காட்சிகள் படத்தின் காப்புரிமை Getty Images

கனடாவில் கில்லர்னே மாகாண பூங்காவில் அமைதியான மற்றும் இயற்கைக்கு மாறான நீலப் பச்சை நிறத்தில் இருந்த ஏரியில் சில குழந்தைகள் சிறிய படகில் பெடலிங் செய்து சென்று கொண்டிருந்தார்கள்.

வெப்பமான சூரிய வெளிச்சம் மிகுந்த நாள் அது. தாகம் அடைந்த ஒரு சிறுவன் தன்னுடன் இருந்த இன்னொருவனின் பாத்திரத்தில் நீர் எடுப்பதற்காக அலுமினிய சமையல் பாத்திரத்தை ஏரி நீரில் வைத்து அழுத்தினான்.

விநாடி நேரம் கவனம் சிதறியதால் அந்தப் பாத்திரம் கைவிட்டுப் போனது. கையில் பிடிக்க முடியாத அளவுக்கு அது தண்ணீரில் மூழ்கியபோது, சுமார் 50 அடி (15.2 மீட்டர்) வரை அடி ஆழத்துக்கும் சென்றாலும், அது தெளிவாகத் தென்பட்டது.

அது 1980களின் மத்தியில் நடந்த சம்பவம். படகு சவாரி சென்ற குழந்தைகளில் ஒருவர் நான். இந்தத் தண்ணீர் இவ்வளவு தெளிவாக இருப்பதற்கு, துரதிருஷ்டவசமான ஒரு விளக்கம் இருக்கிறது.

ஆன்டாரியோவில் சுத்பரி என்ற நகரில் நிக்கல் மற்றும் தாமிர உருக்காலைகளுக்கு அருகே உள்ள இந்த ஏரி, அமில மழையால் தீவிர மாற்றத்துக்கு உட்பட்டிருக்கிறது.

ஆழமான பகுதிகளுக்கு வெளிச்சம் செல்வதைத் தடுக்கக் கூடிய சிறிய பாசிகள் போன்ற - தண்ணீரில் உள்ள எல்லா உயிரினங்களுமே இந்த ஏரியை விட்டுச் சென்றுவிட்டன. அதனால் ஏரியின் தோற்றம் அழகாக உள்ளது. ஆனால் அச்சம் ஊட்டும் வகையில் உயிரற்ற நீர்நிலையாக உள்ளது.

2019க்கு வாருங்கள். வடமேற்கு ஆன்டாரியோவில் தொலைதூரத்தில் ஒரு மூலையில் வேறு சில ஏரிகள் உள்ளன.

உயிரியலாளர் சின்டி தேஸ்ஜர்டின்ஸ் என்பவர் நீடித்த மேம்பாட்டுக்கான பரிசோதனை ஏரிகள் பகுதி குறித்த சர்வதேச கல்வி நிலையத்தில் (IISD-ELA) இரவு நேர படகுப் பயணத்தின் முடிவில் காலையில் காபி குடித்துக் கொண்டிருந்தார். புன்னகையுடன் இருந்தார், ஆனால் தூக்க கலக்கம் இருந்தது.

கும்மிருட்டு சூழ்நிலையில் இரவில் நீண்ட நேரத்தை அவர் கழித்திருந்தார். கோர உருவம் கொண்ட சிறிய உயிரினங்களை அவர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்: மைசிஸ் ரெலிக்டா என்று கூறப்படும் நன்னீரில் வாழும் ஒபோஸ்ஸம் இறால் மீன்கள் பற்றி ஆய்வு செய்தார். 1970களில் தொடங்கிய அமில மழை பரிசோதனையில் பிடிபடாமல் இருக்கும் இடைவெளியை நிரப்புவதற்கு முயற்சிக்கும் குழுவில் ஒருவராக தேஸ்ஜர்டின்ஸ் இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Andrew Milling
Image caption நன்னீரில் வாழும் மைசிஸ் ரெலிக்டா இறால் மீன்கள் அமிலத்தன்மைக்கு மாறிய ஏரிகளில் துன்புறுகின்றன.

தீவிர சர்ச்சை

மிக மோசமானதாக, ஐரோப்பாவில் வனப்பகுதிகளை அமில மழை அழித்துவிட்டது, கனடா மற்றும் அமெரிக்காவில் சில பகுதிகளில் ஏரிகளில் உயிரினங்களை அழித்துவிட்டது. சீனாவில் மனிதர்களுக்கு உடல் நலக் கேடுகளை ஏற்படுத்தி, பயிர்களை நாசம் செய்துள்ளது.

இன்னும் அந்த பாதிப்புகள் தொடர்கின்றன. கார்களில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருளில் இருந்தும் உருக்காலைகள் மற்றும் நிலக்கரி எரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியாகும் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்களும் தான் இதற்குக் காரணம் என்று ஒரு கருத்து இருக்கிறது.

காற்று மண்டலத்தில் தண்ணீர் மற்றும் ஆக்சிஜனுடன் இந்த காற்று மாசுகள் சேரும்போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாறுகின்றன. மேகங்களில் அமிலத் துளிகள் விழுந்து மழை, பனி அல்லது ஆலங்கட்டியாக விழுகிறது.

இப்போது இது நமக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் நீண்டகாலமாக, அமில மழை என்பது புதிராகவே இருந்தது.

ஆய்வு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 1963 ஆம் ஆண்டில் சூழல் வாழ்வியல் குறித்த நீண்டகால ஆய்வின் ஒரு பகுதியாக, ஜீன் லைக்கென்ஸ் என்பவர் நியூ ஹாம்ப்ஷயரில் வெண் சிகரங்கள் பகுதியில் ஹுப்பர்டு புரூக் பரிசோதனை வனப் பகுதியில், மழை சாம்பிள் ஒன்றை சேகரித்தார்.

``நாம் நினைத்திருந்ததைவிட அந்த சாம்பிள் நூறு மடங்கு அதிகமான அமிலத் தன்மை கொண்டதாக இருந்தது'' என்கிறார் லைக்கென்ஸ்.

அவர் இப்போது நியூயார்க்கில் மில்புரூக்கில் கேரி சுற்றுச்சூழல் அறிவியல் நிலையத்தில் சூழலியல் துறை கௌரவப் பேராசிரியராக இருக்கிறார்.

1872ல் நடந்த ஆய்வின் தொடர்ச்சியாக, அதற்கு முன்பும் நடந்த ஆய்வின் தொடர்ச்சியாக, 1963ல் அவருடைய கண்டுபிடிப்பு இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்கத் தொடங்கியது.

அமில மழைக்கான காரணத்தை தனியாக கண்டறிய உதவியது. வட அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகில் தொழில்மயமாக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இது பொருந்துவதாக உள்ளது.

கனடா - அமெரிக்கா எல்லையின் இரு புறங்களிலும் அமில மழை பெய்வதற்கான காரணம் குறித்த முக்கியமான ஆதாரம் வடமேற்கு ஆன்டாரியோவில் பரிசோதனை ஏரிகள் பகுதியில் (ELA) நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தது.

அதன் மென்மைத் தன்மையான தண்ணீரைக் கொண்ட ஏரிகள், அமில மழையின் பாதிப்புகளில் இருந்து தப்பி, கட்டுப்பாடு அமைப்பாக செயல்படும் அளவுக்கு மாசுபாடுகளில் இருந்து விலகியுள்ளன.

மற்ற பல ஏரிகளைப் போல அல்லாமல், ELA-வில் உள்ள ஆரோக்கியமான உயிரிசூழல் அமைப்பு மிக நன்றாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

அப்போது ஈ.எல்.ஏ.வில் மூத்த விஞ்ஞானியாக இருந்த, இப்போது கனடாவில் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக இருக்கும் டேவிட் டேவிட் சின்ட்லர் போன்ற விஞ்ஞானிகள், ஓர் ஏரியில் பரிசோதனை அடிப்படையில் அமிலத்தைக் கலந்து, அதனால் உயிரிசூழல் எப்படி மாறுகிறது என்பதைக் காண தூண்டுதலாக அமைந்தது.

ஈ.எல்.ஏ. விஞ்ஞானிகள் பாதுகாப்புடன் டார்ட் வேடர் போல சென்று, கந்தக அமில கரைசலை எடுத்துச் செல்வார்கள். படகில் பொருத்திய கலக்கும் கருவியின் மூலம் ஓர் ஏரியில் அதைக் கலப்பார்கள்.

டார்ட் வேடர் போல ஈ.எல்.ஏ. விஞ்ஞானிகள் பாதுகாப்புடன் கந்தக அமில கரைசலை எடுத்துச் செல்வார்கள். படகில் பொருத்திய கலக்கும் கருவியின் மூலம் ஓர் ஏரியில் முழுக்க அதைக் கலப்பார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 20வது நூற்றாண்டின் பிற்பாதியில் அமில மழைக்கு தொழிற்சாலை மாசுபாடு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்பு அது கொள்கையளவில் ஏற்கப்பட்டது.

1976ல் தொடங்கி சுமார் ஏழு ஆண்டுகளில் 223 என குறிப்பிடப்பட்ட ஒரு ஏரியின் பி.எச். அளவை 6.8 ல் இருந்து (சம நிலைக்கு நெருக்கமான நிலை) 5.0 என்று (லேசான அமிலத்தன்மை) அவர்கள் குறைத்தார்கள். 5.0 என்ற பி.எச். அளவு மீன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது என்று சோதனைச் சாலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் 223 என்ற எண் உள்ள ஏரியில், நீண்டகாலத்துக்கு முன்பே பி.எச். அளவு 5.0 என்ற அளவுக்கு வந்துவிட்டது. பி.எச். அளவு 5.6 என வரும்போது ஏரியில் பெரும்பாலான மீன்களுக்கு பிடித்த உணவான - வெளி எலும்புக் கூடு உருவாக கால்சியம் தேவைப்படும் சிறிய உயிரினங்கள் - அமிலத்தன்மையான ஏரி நீரில் பாதுகாப்பு உறைகள் கரைந்துவிட்ட நிலையில் இறந்து போய்விட்டிருந்தன.

``ஏரியில் நன்னீர் மீன்கள் இனப் பெருக்கத்தை நிறுத்தியதற்கு நீரில் ஏற்பட்ட அமிலத்தால் நச்சுத் தன்மையால் அல்ல, அவை உணவின்றி இறந்துள்ளன'' என்கிறார் சின்ட்லர்.

நன்னீர் மைக்ரோ பயாலஜி நிபுணர் கரோல் கெல்லி 1978ல் அமில மழை ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது ஈ.எல்.ஏ.வுக்கு சென்றிருக்கிறார். ஏரியை அமிலத்தன்மையாக்கி நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின் குறிப்பிட்ட புதிர் பற்றி அந்தப் பெண் ஆராய்ச்சியாளர் ஆர்வம் கொண்டார். 223 ஏரியின் ஒட்டு மொத்த நீரையும் பி.எச். 5.0 என்ற அளவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வளவு அமிலம் தேவைப்படும் என்று அவருடைய சகாக்கள் மிக கவனமாகக் கணக்கிட்டனர் - சாதாரணமாக உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர் போடும் எளிமையான கணக்கு தான் இது. ஆனால் எரிக்கு இதைக் கணக்கிட்டுப் பார்த்ததில் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

``ஏரியின் தண்ணீரை குறிப்பிட்ட பி.எச். அளவுக்குக் கொண்டு சென்று பிறகு அதை அப்படியே பராமரிக்க போதிய அளவு அமிலம் சேர்க்குமாறு குழுவினருக்கு நான் உத்தரவிட்டேன்'' என்று சின்ட்லர் தெரிவித்தார். அந்தப் பணி பாதி நடந்து கொண்டிருந்த நிலையில், தங்களிடம் அமிலம் காலியாகிக் கொண்டிருப்பதாகக் குழுவினர் தெரிவித்தனர். ஏரியை அமிலமாக்குவதற்கு எவ்வளவு தேவைப்படும் என்று நினைத்தோமோ அதைவிட அதிகமாக செலவாகிக் கொண்டிருந்தது என்கிறார் கெல்லி. ``அது எங்கே போகிறது என்பது தான் கேள்வியாக இருந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆன்டாரியோவில் ஏரிகள் பல தசாப்தங்களாக அமில மழையால் பாதிக்கப் பட்டுள்ளன. இதுகுறித்த கவலை 1980களில் உருவானது.

இதற்கான காரணத்தைக் கண்டறிய கெல்லியும் அவருடைய குழுவினரும் முயற்சி செய்ததில், காரத்தன்மையை உருவாக்கும் நுண்ணுயிரிகள் அமிலத்தை சமன் நிலைக்கு கொண்டு வரக் கூடியவையாக உள்ளன என்றும், அதனால் ரசாயன மாற்றம் மீட்கப்படுவதாகவும் அறிந்தனர். ஒவ்வொரு ஏரியிலும் உயிர்வாழும் பாக்டீரியாக்கள் அமிலத்தை சமநிலைப் படுத்தும் தன்மை கொண்டவை என்பது அப்போது சர்ச்சைக்குரிய கண்டுபிடிப்பாக இருந்தது.

``மக்கள் அதை நம்பவில்லை'' என்கிறார் கெல்லி. ஆனால் கனடா, அமெரிக்கா, நார்வே நாடுகளில் பயணம் மேற்கொண்டு காற்று மண்டல மாறுதலால் அமிலத்தன்மைக்கு மாறிய ஏரிகளைப் பார்வையிட்டு, அவற்றின் சமன்நிலைக்கு மீளும் தன்மை குறித்து அவர் ஆய்வு செய்தார். சமன்பாடு நிலையை எட்டுவதற்கு எவ்வளவு நுண்ணுயிரிகள் தேவைப்படும் என்பதைக் கண்டறிய அவர் முயற்சி செய்தார். ஈ.எல்.ஏ.வில் மட்டுமின்றி, நிறைய ஏரிகளில் சேறு படிந்துள்ள பகுதிகளில் இதுபோன்ற அமிலத்தன்மையில் சமன்பாடு ஏற்படுத்தும் உயிரிகள் இருக்கின்றன என்ற கண்டுபிடிப்பு, மாசு ஏற்படுத்தும் அமில மழையைத் தடுத்துவிட்டால் ஏரிகள் மீட்டுருவாக்கம் பெறும் என்பதை வெளிக்காட்டின.

சந்தேகமும் மறுப்பும்

223 எண் ஏரியில் எடுக்கப்பட்ட, பட்டினியாகக் கிடந்த மீன்களின் புகைப்படங்களையும், அமில மழை தொடர்பான கனடா கூட்டமைப்பு போன்ற சுற்றுச் சூழல் குழுக்கள் எடுத்த புகைப்படங்களையும் சேர்த்துப் பார்த்தபோது - காற்றின் தரத்தை பராமரிக்க தீவிரமான கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை உருவாக்க - அரசின் கொள்கை உருவாக்குபவர்களை நிர்பந்திக்கும் விஷயங்கள் தெரிய வந்தன.

ஆனால் ஈ.எல்.ஏ.வில் அமில மழை ஆராய்ச்சி ஏறத்தாழ முடியவில்லை. ஏரிகளை மாசுபடுத்தும் உபரி சத்துகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த ஆராய்ச்சி ஏற்படுத்தப் பட்டது. 1970களில் நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளை ஏற்கெனவே கொடுத்துவிட்டது. ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாட்டை கனடாவின் மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்து குறிப்பிடத்தக்க ஆதாரம் கிடைத்துள்ள போதிலும், ஈ.எல்.ஏ.வை காப்பாற்றுவதற்காக அமிலமழை என்ற சிந்தனையை தாம் கண்டுபிடித்திருப்பதாக ஓர் அதிகாரி தம் மீது குற்றஞ்சாட்டியதாக சின்ட்லர் கூறுகிறார்.

குற்றவாளிகள் யார் என்பதை விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். பத்திரிகையாளர்கள் 1970கள் மற்றும் 1980களில் இந்தப் பிரச்சனை குறித்து செய்திகள் வெளியிட்டனர். ஆனால் இந்தத் துறையில் பணியாற்றும் சிலர் குழப்பங்களை ஏற்படுத்த தங்களால் இயன்றதைச் செய்தார்கள், சந்தேகங்களை விதைத்து செயல்பாடுகளை தாமதப் படுத்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பாவில் தொழிற்சாலை மாசுபாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மரங்களில் இலைகளை அமில மழை உரித்துவிட்டது.

``அமில மழை மறுப்பாளர்கள் நிறைய பேர் இருந்தனர்'' என்கிறார் லைக்கென்ஸ். அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தலைப்பில் பொது சொற்பொழிவுகள் நிகழ்த்தியது லைக்கென்ஸ் நினைவில் இருக்கிறது. அப்போது யாராவது எழுந்து நின்று, மூர்க்கத்தனமாக இடையூறு செய்து, அமில மழையை தாங்கள் நம்பவில்லை என்று கூறுவார். ``மழை நீரை எப்போதாவது நீங்கள் சேகரித்து ஆய்வு செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்பேன். அவர்கள் இல்லை என்று சொல்வார்கள். நல்லது, எப்போதாவது அதை சோதித்துப் பாருங்கள் என்று சொல்வேன்"' என்று லைக்கென்ஸ் தெரிவிக்கிறார்.

பருவநிலை மாற்றத்தைப் போல, சொந்த ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் தொடர்புடைய பெரிய, சக்திமிக்க, வசதிமிக்க மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லைக்கென்ஸ். 1963ல் அதன் கண்டுபிடிப்பில் தொடங்கி, 1990ல் சுத்தமான காற்றுக்கான சட்டம் உருவாக்கப்பட்டது வரையில், அமில மழைக்கான சட்டத்தை உருவாக்குவதற்கு 27 ஆண்டுகளாகிவிட்டது.

இடைப்பட்ட காலத்தில் எல்லைகளைக் கடந்த வாதங்கள் நிகழ்ந்துள்ளன. ``எல்லையில் உள்ள நீரை அமிலத்தன்மையாக்குவதாக கனடா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது தான், முதலாவது சர்வதேச தகராறாக இருந்தது'' என்கிறார் சின்ட்லர். ஆன்டாரியோவில் அடிகோக்கன் என்ற இடத்தில் உள்ள சிறிய அனல்மின் நிலையம் தொடர்பாக இந்த தகராறு ஏற்பட்டது. எல்லையின் தெற்குப் பகுதியில் அமில மழையை உருவாக்குவதாக அமெரிக்கா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மின்னோஸ்டாவில் மின்னியாபோலீஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கனடா விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் சின்ட்லர் கலந்து கொண்டார்.

``அனைத்து தகவல்களும் அங்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எல்லையில் உள்ள நீரில் பாதிப்பை ஏற்படுத்துவதில் அடிகோக்கன் கந்தகம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது'' என்று சின்ட்லர் கூறுகிறார். அதே கூட்டத்தில், சர்வதேச கழிவுகள் ஓட்டத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். கனடா ஏரிகளில் சேகரிக்கப்படும் மொத்த அமில மழையில் பாதிக்கும் மேலானவை பெனிசில்வேனியா மற்றும் நியூ இங்கிலாந்து பகுதிகளில் உள்ள தொழிற்சாலைப் பகுதிகள் மற்றும் குறிப்பாக ஓஹியோ பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து தான் வருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிய வந்தது.

பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. ``ஒரு சமயத்தில் அமெரிக்கா - கனடா இரு தரப்பு பிரச்சினையாக'' அமில மழை பிரச்சினை இருந்தது என்று அடிலே ஹியுர்லே தெரிவிக்கிறார். 1981ல் பிறருடன் சேர்ந்து தாம் தொடங்கிய அமில மழை தொடர்பான கனடா கூட்டமைப்பின் பத்தாண்டு கால பணிகள் குறித்த உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூய காற்று சட்டத்தில் 1990 நவம்பரில் செய்த திருத்தங்களை இந்த அமைப்பு நிராகரித்தது. அமில மழை திட்டம் உருவாக்கம், கனடா தரப்பில் இணையான செயல்பாடுகள் ஆகியவற்றை செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமில மழையால் பாதிக்கப்பட்ட ஏரிகளில் காரத்தன்மை கொண்ட பொருட்களை பெருமளவில் கலந்ததால் சமன்பாட்டு நிலை ஏற்பட உதவியாக இருந்தது.

ஏரிகளின் மூலம் கிடைத்த பாடங்கள்

அந்த ஆரம்பகட்ட பரிசோதனைகளுக்கு அரை நூற்றாண்டு கழித்து, ஈ.எல்.ஏ.வின் 223வது ஏரி இப்போது அமிலத்தன்மை கொண்டதாக இல்லை, அமிலத்தை சாப்பிடும் நுண்ணுயிரிகள் தங்கள் பணியைச் செய்துள்ளன. பரிசோதனைக்கு முந்தைய நிலை திரும்பி இருப்பதாக ஏரியின் ரசாயனப் பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. இருந்தபோதிலும், உயிரினங்கள் மீட்டுருவாக்கம் பின்தங்கிவிட்டது. கட்டுப்பாட்டில் உள்ள, தொடப்படாத ஏரிகளில் நன்னீர் இறால்கள் எண்ணிக்கை ஆரோக்கியமான அளவில் நீடிக்கிறது. ஆனால் 223 எண் ஏரியில், அவை இன்னும் காணப்படவில்லை. எனவே, மீண்டும் நன்னீர் இறால்களை - ஒரு முறைக்கு 10,000 என்ற அளவில் கொண்டு வருவது - உயிரிசூழலை புதுப்பிக்குமா என்பது பற்றி தேஸ்ஜர்டின்ஸ் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆரம்ப கட்ட அறிகுறிகள் சாதகமாகத் தோன்றுகின்றன. ஆழமான பகுதிகளில் மைசிஸ் இறால்கள் இருப்பதற்கான தடயங்களைத் தேடும் முயற்சியில், நீர்மூழ்கி ஆளில்லா வாகனங்கள் மூலம் ஆய்வு நடத்தியதில், இதுவரை வெறும் இரண்டு இறால்கள் மட்டும் காணப் பட்டுள்ளன. ஆனால், இரவு பகலாக உழைத்த உழைப்பு வீண் போய்விடவில்லை - உயிரிச் சூழலில் விடுபட்டுப் போயிருந்த இந்த இணைப்பு, அமில மழையால் அழிந்து போன இந்த இணைப்பு மீண்டும் திரும்ப வரலாம் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

வட அமெரிக்காவில் அமில மழை அதன் மூல நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டதால் ஏரிகள் மீட்டுருவாக்கம் செய்யப் பட்டுள்ளன.

1990களில் இருந்த நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், காற்று மண்டலத்தில் உள்ள சல்பேட் அயனிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்த இடங்களில், இப்போது கணக்கில் கொள்ளத் தேவையில்லாத அளவுக்குக் குறைந்துவிட்டன. ஆனால் இந்தப் பிரச்சினை முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. உரங்களில் இருந்தும், கால்நடைத் தீவனங்களில் இருந்து வெளியாகும் அம்மோனியா கலந்த விவசாயக் கழிவுகளில் இருந்து நைட்ரேட்கள் உற்பத்தியாவது, நைட்ரிக் அமில வீழ்படிவாக்கத்துக்குக் காரணமாக இருக்கின்றன. மேலும் அமில மழை - கந்தகம் மற்றும் நைட்ரஜனால் உருவாகும் அமிலமழை - ஆசியாவில் அதிகரித்து வரும் பிரச்சினையாக இருக்கிறது.

சிக்கலான சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வு எதுவும் கிடையாது. ஆனால், அமில மழையைத் தடுத்தல் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையில் இணையான போக்கு உள்ளதா? தொழில் துறையினர் மேற்கொள்ளும் காலம் கடத்தும் வழிமுறைகளில் ஒரே மாதிரியான போக்கு காணப் படுவதாக சின்ட்லர் கூறுகிறார். `

`நிறைய சந்தேகங்களை எழுப்புவது, அரசியல் பிரசாரகர்களுக்கு நிறைய பணம் கொடுப்பது, நடவடிக்கையை காலம் கடத்துவது'' என்ற நிலை உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். ``இது பேரிரைச்சலாகத் தோன்றலாம். ஆனால் நெருக்கமாக நீங்கள் பார்த்தால், பெரும்பாலான சுற்றுச் சூழல் பிரச்சினைகள் இப்படி தான் கையாளப் படுகின்றன. இதில் பருவநிலை மாற்ற பிரச்சினை மட்டும் விதிவிலக்கு கிடையாது'' என்கிறார் அவர்.

இவ்வளவு இருந்தபோதிலும், கழிவுகள் வெளியாதலைக் குறைப்பது, அமில மழைக் கட்டுப்பாட்டில் வெற்றிக்கான ஒரு பெரிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார் லைக்கென்ஸ். ஆனால் நைட்ரஜன் ஆக்சைடுகளை இன்னும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது. கழிவுகள் வெளியாதலின் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அமெரிக்காவின் இப்போதைய அதிபர் கூறியுள்ளார். அப்படி நடந்தால், வகிழக்கு நியூயார்க்கில் அடிரோன்டாக் மலைகள் போன்ற இடங்களில் உள்ள ஏரிகளை மீட்பது சிரமமாகிவிடும். அவற்றை சமன்பாட்டு நிலைக்கு கொண்டு வரக் கூடிய திறன் ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ளது என்று லைக்கென்ஸ் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்கா மற்றும் கனடாவில் அமில மழையைக் குறைப்பதற்கான கொள்கைகள் பெருமளவு பயன் தருவதாக உள்ளன. ஏரிகளை மீட்டுருவாக்கம் செய்ய உதவியாக உள்ளன.

வட அமெரிக்காவில் அமில மழை பிரச்சினையைக் கையாள்வது அருகில் உள்ள இரு நாடுகளுடன் இணைந்த செயல்பாடுகள் தேவைப்பட்டன. ஆனால் பருவநிலை மாற்றத்துக்கு, சவால்கள் பரந்த நிலையில் இருந்தன, தீர்வுகள் உலகளாவியதாக உள்ளன. இருந்தபோதிலும், இரு பிரச்சினைகளிலும் ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுக்குமே நவீன தொழில்நுட்பம் தேவை, ஊடக செய்திகள், பொதுவான களத்தைக் கண்டறிதல், எதிரெதிர் தரப்பினருக்கு இடையில் ஒத்துழைப்பை உருவாக்குதல் ஆகியவை தேவை என்று ஹியூர்லே கூறுகிறார்.

அமில மழைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஹியூர்லே உதவியாக இருந்தால். விளையாட்டு வீரர்களின் காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பேசுவது, மீன் பிடித்தலுக்கு சுத்தமான தண்ணீரின் தேவை பற்றிய கலந்துரையாடல்களில் அவர்களைப் பங்கேற்கச் செய்வது, கல்லறை சுவர்களில் சுண்ணாம்புக் கற்கள் அமிலத்தால் அரிக்கப்படும் நிலையில் கல்லறைகளில் நடந்து செல்வது குறித்த கலந்துரையாடல்களில் அவர்களைப் பங்கேற்கச் செய்தார்.

ஆதிக்கத்தனம் தொடர்கிறது என்றாலும், அமில மழை பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன. குறைந்த பட்சம் வட அமெரிக்காவில் அது நடக்கிறது. ஏனெனில் அது வித்திசாயம் பாராமல் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சனையாக உள்ளது.

``இயற்கை ஆதார வளங்களை - நமது வனங்கள், நமது வடக்கு ஏரிகள் மற்றும் அவற்றில் உள்ள மீன்கள் போன்றவற்றை - எல்லோருக்கும் உரிய ஆதார வளங்களைக் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என்ற நம்பிக்கை மக்களில் பெரும்பாலானவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது'' என்று ஹியூர்லே தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: