'பிரான்சில் வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர்; பாதிப்பேர் 75 வயதுக்கும் மேல்' மற்றும் பிற செய்திகள்

A woman cools down at the fountains of Trocadero, across from the Eiffel Tower, during a heatwave in Paris, France, படத்தின் காப்புரிமை EPA
Image caption இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வீசியது.

பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார்.

பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

கடந்த வெயில் காலத்தில் அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பள்ளிகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை அங்கு இருந்திராத வெப்பநிலை பதிவானது.

ஆனால், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை.

"விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்" - இஸ்ரோ தலைவர் சிவன்

படத்தின் காப்புரிமை ISRO

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சுற்றுவட்டக் கலன் (ஆர்பிட்டர்) விக்ரம் லேண்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆனால், "இதுவரை லேண்டருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் தொடர்பு செய்ய முயற்சித்து வருகிறோம். விரைவில் தொடர்பு கொள்வோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: "விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்" - இஸ்ரோ தலைவர் சிவன்

விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள்

படத்தின் காப்புரிமை AFP

மெக்ஸிக்கோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில் வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துப்போன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.

உலமா என்றழைக்கப்படும் இந்த பந்து விளையாட்டானது, மெசோஅமெரிக்காவில் ஸ்பானிஷ் படையினர் வந்த 1519ஆம் ஆண்டுக்கு முன்பே ஐந்து நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு பாரம்பரிய விளையாட்டு.

மத்திய மெக்சிகோவில் தொடங்கி, தெற்கே கௌதமாலா, எல் சால்வடார், நிகராகுவா, ஹாண்ட்யூரஸ், கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பழங்காலப் பரப்பு மெசோ அமெரிக்கா எனப்பட்டது.

மேலும் படிக்க: 1000 ஆண்டுகள் பழமையான பூர்வகுடிகளின் விளையாட்டை மீட்ட இளைஞர்கள்

இயற்கை விவசாய பெண்கள்

தமிழகம் முழுவதும் சுயஉதவிக் குழுக்களிலுள்ள பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக மாதம் ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் சந்தை வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.

குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பொருட்கள் விற்பனையாகும் சந்தையாக வளர்ச்சி பெற்றுள்ளது இந்த மாத சந்தை.

மேலும் படிக்க:சென்னைவாசிகளுக்கு கிராம சந்தை அனுபவம் தரும் இயற்கை விவசாய பெண்கள்

தீவிரவாதிகளின் பிடியில் குண்டு தயாரித்த பாதிரியார்

படத்தின் காப்புரிமை Alamy

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள மராவி நகரை 2017ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த கைதிகளில் ஒருவர் கத்தோலிக்க பங்குத் தந்தை சிட்டோ.

கொடுமைப்படுத்துவதாக மிரட்டி அவரை வெடிகுண்டுகள் செய்ய கட்டாயப் படுத்தினர்.

அந்த அனுபவம் அவருக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை அளித்தது. ஆனால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்வார்கள் என்று தொடர்ந்து நம்புகிறார்.

மேலும் படிக்க: தீவிரவாதிகளின் பிடியில் குண்டு தயாரித்த பாதிரியார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: