உங்களிடம் கூடுதலாக இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவது எப்படி?

உற்சாகமற்ற இளைஞர் படத்தின் காப்புரிமை Getty Images

பல்லாண்டுகாலம் உழைத்தவர்கள் கடைசியில் ஓய்வுபெற்ற பிறகு, வேலை இல்லாமல் நாட்களை கழிக்க சிரமப்படுவது பற்றி நாம் சிந்திப்பது வழக்கம்.

தொழில்முறையில் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, வேலையில்லாத வாழ்க்கை என்பது, வாழ்வில் உற்சாகம் குன்றிய காலமாக இருக்கும்.

வேலை இருக்கும்போது, வார நாட்கள் அர்த்தம் உள்ளதாகவும், செயல் திட்டம் கொண்டதாகவும் இருக்கும். எதிர்காலத்தில் ஓய்வுநேரம் என்பது ஆரோக்கியமற்றதாவும், கலக்கம் தருவதாகவும் இருக்கும். இத்தகைய நிலை குற்றச்செயல்களுக்கும் போதை மருந்து பயன்பாடு போன்ற செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கலாம்.

''பொது அறிவு மற்றும் மனிதர்களின் அனுபவம் குறித்த தகவல்களின்படி பார்த்தால் வேலை இல்லாத நிலையில் பலரும் சிரமப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது,'' என்று ஆண்ட்ரூ யாங் கூறுகிறார். இவர் இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருக்கிறார். லாப நோக்கற்ற வேலைவாய்ப்பு உருவாக்கும் வென்ச்சர் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தை உருவாக்கியவர் ஆண்ட்ரூ யாங்.

``நமக்கு நிறைய நேரம் இருந்தாலும், செயல்படாமல் இருக்கிறோம், நாமாக முன்வந்து எதிலாவது ஈடுபடுத்திக்கொண்டு செயல்படுவது குறைவாக இருக்கிறது. காலப்போக்கில் நிறைய வீடியோ கேம் விளையாடத் தொடங்குவோம், நிறைய மது குடிக்கவும் தொடங்குவோம். வேலை இல்லாதவர்களை சமூகம் பொதுவாகவே மரியாதை குறைவாகவே பார்க்கும்,'' என்று அவர் கருதுகிறார்.

மும்முரமாக இருப்பது என்பது 'வேலையாக' இருப்பது ஆகாது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீண்டகாலம் வாழும் மக்கள் உள்ளதாகக் கூறப்படும் ஜப்பான் நாட்டில், அவர்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்வதற்கு, ஊதியத்துடன் கூடிய வேலைதான் வேண்டும் என்று கிடையாது.

உதாரணத்துக்கு ஜப்பானியர்களின் இகிகாய் (ikigai) கருத்தியலை பின்பற்றலாம். அதன்படி, காலையில் எழுவதற்கு ஒரு காரணத்தை உருவாக்கும் வகையில் ஒரு செயல்பாட்டின் மீது கவனம் செலுத்தி மகிழ்ச்சியை அடைவதற்கு அந்த நடைமுறை ஊக்கம் தருகிறது.

2010ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆண்கள் மற்றும் பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தியதில், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களே இகிகாய் கருத்தியலுடன் தங்களுடைய வேலையை ஒப்பிட்டுப் பார்த்தனர். பொழுதுபோக்குகள், உறவுமுறைகள் மற்றும் ஊதியம் இல்லாத வேலை ஆகியவை அவர்களுடைய ''ஓய்வுக்காலத்துக்கு'' அர்த்தம் தருவதாக உள்ளன என்று தெரிய வந்தது.

ஓய்வுநேரம் என்பது எப்போதும் ஓய்வாக இருப்பதற்கல்ல

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ``ஓய்வாக இருக்கும் போது'' ஊதியம் இல்லாமல் எவ்வளவு வேலைகள் செய்கிறீர்கள்?

இப்போதைக்கு, பெண்கள் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக உழைக்கிறார்கள், ஆனால் அந்த ''வேலையின்'' பெரும்பகுதி, ஊதியத்துடன் கூடிய வேலையைப் போல மதிக்கப்படுவது இல்லை.

குழந்தைகளை கவனித்துக் கொள்வது, வயதான பெற்றோரைக் கவனிப்பது, வீட்டு, சமூக மற்றும் சமுதாய பொறுப்புகளைக் கையாள்வது, இவற்றுக்கு பல மணி நேரங்கள் ஆகிறது.

ஊதியத்துடன் கூடிய வேலையின் சுமையைக் குறைப்பது, ஏற்கெனவே நடைபெற்று வரும் ஊதியம் இல்லாத கவனிப்புகளுக்கு நேரத்தை அல்லது சக்தியை ஒதுக்க உதவியாக இருக்கும். ஆனால் மக்கள் இலவசமாக உழைக்க வேண்டும் என்பதை நம்பி அவை உள்ளதால், அரசும் நிறுவனங்களும் சில சேவைகளில் குறைவாக முதலீடு செய்யக் கூடாது.

ஓய்வு நாட்கள் நீண்டதாக இருந்தால் செலவு அதிகமாக இருக்கும்

வெவ்வேறு இடங்களில் எடுத்த ஆய்வுகளைப் பார்த்தால், வார இறுதி ஓய்வு நாட்களை நீண்டதாக வைத்துக் கொள்ளும், பொருளீட்டும் வேலை உள்ளவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நேரத்தை விளையாடுவது முதல், முதியவர்களுடன் நேரத்தை செலவிடுதல் வரை என பல செயல்பாடுகளில் கழிக்கிறார்கள் என தெரிய வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன்னார்வலராக இருக்க உங்களால் முடியுமா?

பகுதிநேர வேலையாக எடுத்துக் கொள்வது தனக்கு சவுகரியமாக இருப்பதால், வாரத்தில் நான்கு நாட்களுக்கும் அதிகமாக இல்லாத வகையில் பணியாற்ற முடிவு செய்ததாக லண்டனில் மார்க்கெட்டிங் மற்றும தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றும் அலெக்சாண்ட்ரா ஹர்ட்னல் என்ற பெண்மணி தெரிவித்தார்.

கலாபகோஸ் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு கட்டணம் இல்லாமல் தகவல் தொடர்பு பணிகளை செய்து கொடுத்து, சுற்றுச்சூழல் விஷயங்களில் தனக்குப் பிடித்தமான செயல்பாடுகளில் ஈடுபட கூடுதல் அரை நாளை அவர் இப்போது செலவிடுகிறார்.

இதில் ஒரு பகுதி அவருடைய ஆளுமையை அதிகரிக்கிறது. துடிப்பாக இருப்பதை அவர் விரும்புகிறார்.

ஆனால், பணத்துக்கான உத்தரவாதம் இருப்பதால் தான் தன்னார்வலர் பணியை தம்மால் மேற்கொள்ள முடிகிறது என ஹர்ட்னல் ஒப்புக்கொள்கிறார்.

அதிக சமத்துவமின்மையை உருவாக்கும்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பணிக்கு வெளியே உள்ளவற்றை பற்றி கவலைப்படுவது தேவையில்லாத விஷயமாக இருக்கலாம்.

ஹர்னல் போன்று வாரத்தில் நான்கு நாட்களுக்கு வேலை என்பது விருப்பத்துக்கு ஏற்ற பணியாக இருக்கலாம். அதிக வேலையை எதிர்பார்த்திருக்கும், குறைந்த ஊதியம் உள்ளவர்களின் உழைப்பில் அது சாத்தியமாகிறது என்று ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றாளர் தொழிலாளியான பிலிப் ரெய்க் கூறுகிறார்.

நிலையற்ற வேலையில், குறைந்த சம்பளத்தில் அல்லது குறைந்த ஓய்வுக்கால சேமிப்பு வாய்ப்பு உள்ளவர்களுக்கு, பணிக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி கவலைப்படுவது, ஏற்றுக்கொள்ள முடியாத ஆடம்பரமான அம்சமாக இருக்கிறது.

தங்களுடைய பிரதான வருமானத்துடன், கூடுதல் வருமானத்துக்கான வழிகளை அவர்கள் தீவிரமாகத் தேடுவதால், ஓய்வு நேரம் என்பது வெறும் மாயை என்பது போல இருக்கிறது.

நமது சமூகத்தில், வாரத்துக்கான வேலை என்பது 40 மணி நேரங்கள் என்பதாக இல்லாமல், 28 மணி நேரங்கள் மட்டும் என்று ஏற்றுக் கொண்டு, கண்ணியமான சம்பளத்தைப் பெற அதுவே போதும் என்று மாற்றினால், இதைப் புறந்தள்ளிவிடலாம் என்கிறார் ரெய்க்.

ஆனால், பகுதி நேர வேலை, மினி வேலைகள் அல்லது ஓய்வு நேர ஒப்பந்தங்கள் எல்லாம் இன்னும் உள்ள நிலையில், அதுபோன்ற ஒருமித்த கருத்து குறுகிய காலத்துக்குள் ஏற்படுவது சந்தேகம்தான் என்று அவர் கூறுகிறார்.

குறுகிய வார வேலை நாட்கள் என்பது குறித்த விவாதம், அனைவருக்கும் நியாயமான தரமான வாழ்க்கை நிலையை உறுதி செய்வதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான அடிப்படை சம்பளம், அதிக அளவிலான குறைந்தபட்ச ஊதியம் அல்லது குறைந்த வேலை நேரங்கள் திட்டத்துக்கு மாறும்போது ஊதியக் குறைப்பு இல்லாதது என்பவற்றை உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்களா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேலையில்லா நேரம் என்பது எப்போதும் சமூக ஈடுபாடு என்ற அர்த்தமாக இருக்காது.

வேலையில் இருந்து விலகி வேலையில்லாத நேரத்தை உருவாக்கிக் கொள்வதால் மட்டுமே, தானாகவே சமுதாயப் பணிகளில் ஈடுபாடு ஏற்பட்டுவிடுமா என்பது ஒரு சவாலாக இருக்கிறது.

ஆஸ்திரியாவில் 35 முதல் 44 வயது வரையுள்ளவர்கள், சார்ந்திருக்கும் பிள்ளைகளைக் கொண்டிருப்பவர்கள்தான். வேறு வகையில் சொல்வதானால், வேலையில் மும்முரமாக இருப்பவர்கள் அதிகம் தன்னார்வலர் பணிக்கு வருகிறார்கள் என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தில் ஆஸ்திரேலிய ஆய்வுகள் பற்றிய வருகைதரு பேராசிரியராக உள்ள இருக்கும் மெலனி ஓப்பன்ஹெய்மர் கூறுகிறார்.

தன்னார்வலர் பணி என்பது பலரும் நினைப்பதைவிட பெரிய விஷயம் என்பது இதற்கு ஓரளவு காரணமாக உள்ளது: குழந்தைகளின் கால்பந்து விளையாட்டில் நடுவராக இருப்பது, பள்ளிக்கூட விழாவில் கலந்து கொள்வது, புதிதாகக் குடியேறி வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது, ஒருவருடைய அறிவியல் செயல் திட்டத்தில் உதவி செய்வது, மத விழாவுக்கு திட்டமிடுதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபாடு காட்டுகிறார்கள்.

இதுபோன்ற செயல்பாடுகளுக்கு நேரம் ஒரு தடையாக இல்லை என்று ஓப்பன்ஹெய்மர் கூறுகிறார். தன்னார்வலர் பணியாற்ற விரும்புவோருக்கு, உரிய வாய்ப்புகளை தொடர்புபடுத்திக் கொடுப்பது முக்கியமானது என்கிறார் அவர்.

ஆனால் அது அவ்வளவு மோசமல்ல...

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வார வேலை நேரத்தை குறைப்பது என்பது மக்கள் பலரின் நீண்டகால விருப்பமாக உள்ளது.

வழக்கமான வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பதைக் குறைத்துவிட்டால், ஆரம்ப கால உற்சாகத்துக்குப் பிறகு, மிச்சமிருக்கும் நேரத்தை மக்கள் எப்படி செலவிடுவார்கள் என்பதை அறிய, போதிய அளவுக்கு நீண்டகால ஆய்வுகள் எதுவும் இல்லை.

இருந்தபோதிலும், தங்களால் அதிக ஓய்வெடுக்க முடியும், ஆரோக்கியமாக இருக்க முடியும், உற்பத்தித் திறன் அதிகரிக்கும், குடும்பத்திற்கு நேரத்தை செலவிட முடியும், அரசியலில் பங்கேற்க முடியும் என்று கூறி, குறுகிய வார வேலைநாட்கள் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

1954ஆம் ஆண்டில், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை என்பதை, ஐந்து நாட்கள் வேலை என மாற்றுவது பற்றி ஜெர்மன் அரசியல்வாதி ஒருவர் எழுச்சியுடன் கருத்து தெரிவித்தார்; ``சனிக்கிழமை வேலை இல்லாமல் இருந்தால் நாம் திரைப்படத்துக்குச் செல்வோம், நாடகத்துக்கு அல்லது சர்க்கஸ் பார்க்கச் செல்வோம்; மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிராமப் பகுதிகளுக்குச் செல்வோம், நமக்கான தோட்டங்களில் வேலை செய்வோம்'' என்று கூறினார்.

``வாரத்தில் நான்கு வேலை நாட்கள் என்ற திட்டத்துக்கு இன்றைக்கு தொழிலாளர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்க மாறுபாடாக உள்ளது. குறுகிய காலத்துக்கான போராட்டங்களின் வரலாற்றைப் பார்த்தால், அதை எட்ட தொழிற்சங்கங்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது'' என்று ரெய்க் கூறுகிறார்.

நூறாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட முதலாளிகள் இன்னும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஏனெனில் உற்பத்தி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று ரெய்க் குறிப்பிடுகிறார்.

குறைந்த வார வேலை நாட்கள் திட்டத்தை முன்வைக்கும் தொழிலாளர் இயக்கங்களைப் பொருத்த வரை, தனிப்பட்ட ஓய்வுநேர ஆதாயங்களைப் பற்றியே அவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்களே தவிர, சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை என்று அவர் கூறுகிறார்.

சொத்து மதிப்பிடுதலுக்கு வேறு வழிமுறைகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நியுசிலாந்தில் குடிமக்களின் நலனை ஜி.டி.பி. பொருத்து மதிப்பிடப்படுகிறது.

நீண்டகால நோக்கில், குறைவான நேரம் உழைப்பது என்பது, நம்மை நாம் எப்படி வரையறுத்துக் கொள்கிறோம் என்பதிலும், மற்றவர்களுடன் எப்படி ஈடுபாடு காட்டுகிறோம் என்பதிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா?

``உங்களுடைய அடையாளம் வேலையுடன் தொடர்புள்ளது என்று நான் கருதுகிறேன்'' என்று தகவல் தொடர்பு ஆலோசகர் ஹர்னல் கூறுகிறார். தனது அடையாளத்துடன் தொடர்பு இல்லாத, ஊதியத்துடன் கூடிய வேலையில் சிறிதளவு நேரத்தையும் செலவிட விரும்பவில்லை என்கிறார் அவர்.

அப்படியானால் எதிர்காலத்தில், ``நீங்கள் என்ன செய்வீர்கள்'' என்ற அச்சம் ஏற்படுத்தும் கேள்விக்கு, இப்போதைய வேலைக்கு அப்பாற்பட்டதாக பல வகையான பதில்கள் கிடைக்கலாம்.

பரந்த நோக்கில் பார்த்தால், வேலை திட்டத்தில் மாறுதல் செய்வது, அதிக கற்பனைத் திறனை வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எல்லா நேரமும் பணியாற்றத் தேவையில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சரத் தவாலா என்பவர் இந்தியாவில் ஹைதராபாத் நகரில் வாழும் சமூகவியலாளர். `பெட்டர் இன்கம் எர்த் நெட்வொர்க்' அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார். அடிப்படை வருமானம் மற்றும் மக்கள் குறித்த விவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அறக்கட்டளை அது.

என்ன வேலை உற்பத்தியைத் தருகிறது, எந்த வேலை மக்களை பூடான் ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி (நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான அளவீடு) அல்லது நியூசிலாந்தின் நலமான நிலைக்கான பட்ஜெட் (முதலீட்டு ஆதாயத்துக்கு ஏற்ப குடிமக்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீடு) போன்ற குறியீடுகளை போல அனுபவிக்க அனுமதிக்கிறது என்பதற்கான அளவீடுகளில் மாற்றம் தேவை என்று அவர் கூறுகிறார்.

அடிப்படை வருமானம் குறித்து இந்தியாவில் மலைவாழ் கிராமத்தில் தவாலா பரீட்சார்த்த ஆய்வு மேற்கொண்டதில், ``ஒற்றுமை தாக்கம்'' இருப்பதாகக் கண்டறிந்தார்: அளவுக்கு அதிகமான வட்டி வாங்கும் பண முதலைகளை சார்ந்திருப்பதைத் தவிர்க்க, பக்கத்தில் வசிப்பவர்கள் தங்களுக்குள் கடன் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்; அல்லது திருமணங்கள் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்காக எல்லோரும் பணம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

வேலை மற்றும் ஓய்வு, அல்லது ஊதியத்துடன் கூடிய வேலை மற்றும் சமுதாயப் பணி என்பதில் குறைந்த கடுமையுள்ள மற்றும் செயற்கையான வித்தியாசங்களைப் பொருத்து, நேரத்தை எப்படி செலவிடுவது என்ற சமூகத்தின் போக்கில் மாற்றம் இருக்கும் என்று தவாலா கருதுகிறார்.

எதிர்காலம் அனுமானத்துக்கு ஏற்ப நிச்சயமற்றதாக உள்ளது என்று தவாலா சுட்டிக்காட்டுகிறார். எதிர்காலம் அலுவலகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதில் கழியப் போகிறதா அல்லது முயல்களின் இனப்பெருக்கத்தை கவனிப்பதில் செலவாகப் போகிறதா என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது என்கிறார்.

Nigerian Torture House: பாலியல் துன்புறுத்தல், பட்டினி - சித்ரவதை செய்யப்பட்ட 500 பேர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :