வர்த்தக போர்: வரிவிதிப்பில் விலக்கு - அமெரிக்காவுடன் இணக்கம் காட்டுகிறதா சீனா? மற்றும் பிற செய்திகள்

வர்த்தக போர்: வரிவிதிப்பில் விலக்கு - அமெரிக்காவுடன் இணக்கம் காட்டுகிறதா சீனா? மற்றும் பிற செய்திகள் படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் வர்த்தகபோருக்கு மத்தியில், வரிவிலக்கில் இருந்து விடுவித்து 16 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் பட்டியலை சீனா வெளியிட்டது.

புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் விலங்குகள் தீவனம் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

5000க்கும் மேற்பட்ட பொருட்கள் வரிவிதிப்பு பட்டியலில் உள்ள நிலையில், இன்னமும் பல பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

சீனாவின் இந்த வரிவிலக்கு முடிவை வரவேற்ற செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் இந்த முடிவு வரவிருக்கும் பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு முன் மிகவும் உகந்த சூழலை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் வேகம் குறைந்து 6.2 ஆனது அங்கு கவலையை ஏற்படுத்தின.

சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா? - மயில்சாமி அண்ணாதுரை

படத்தின் காப்புரிமை ISRO

இந்தியாவின் சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேற்பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கருவியை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமா?

விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேல் பகுதியில் கிடப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாகத் தொழில்நுட்ப ரீதியாகப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து பிபிசி தமிழிடம் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

மேலும் படிக்க:சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள்: மாவட்ட நிர்வாகம் முதல் மகேந்திரா நிறுவனம் வரை குவியும் உதவிகள்

கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் புதிய வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் பிபிசி தமிழ் உட்படப் பல ஊடகங்களில் செய்தியாக வந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டிக்கு பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கமலாத்தாள் பாட்டி குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வந்த செய்திகளால், பலர் பாட்டியின் வீடு தேடிச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பொருள் உதவியும் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:ஒரு ரூபாய் இட்லிப்பாட்டிக்கு மாவட்ட நிர்வாகம் முதல் மகேந்திரா நிறுவனம் வரை குவியும் உதவிகள்

ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட குழந்தை 20 வருடங்கள் கழித்து பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம்

படத்தின் காப்புரிமை MOHANAVADIVELAN

என் மனைவி தண்ணீர் பிடிக்க நின்றிருந்தபோது, ஒரு நிமிடத்தில் சுபாஷை துணியைப்போட்டு மூடி தூக்கிச் சென்றுவிட்டான் அந்த மனிதன்" என்று 1999யில் தனது ஒன்றரை வயது மகனை தொலைத்த அந்த நேரத்தை நினைவு கூறுகிறார் நாகேஷ்வரராவ்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த அந்த மாலைப்பொழுதில் குழந்தையைக் காணவில்லை என்று அனைவரும் தேடியும், கண்டுபிடிக்க முடியாமல் போனது என்று கூறும் அவர், தங்களின் தேடுதல் குறித்து விவரித்தார்.

"குழந்தை கிடைக்கவேண்டும் என்று நாங்கள் செய்யாத முயற்சி இல்லை. காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் உதவியை நாடியது முதல், பல கோவில்களுக்குப் பயணம் மேற்கொண்டது வரை அனைத்தையும் செய்தோம்", என்கிறார் அவர்.

நாகேஸ்வர ராவ்- சிவகாமி தம்பதி சென்னையிலுள்ள புளியந்தோப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் கடைசி குழந்தையான சுபாஷ்தான் 1999இல் கடத்தப்பட்டார்.

மேலும் படிக்க:ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட குழந்தை 20 வருடங்கள் கழித்து பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம்

9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்: விரிவான தகவல்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின்.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம் எழுந்தால், ``பதில் அளிக்கப்படாத மற்றொரு கேள்விக்கு'' கவனம் மாறிவிடுகிறது.

9/11 தாக்குதலின் பின்னணி பற்றி இணையத்தில் சுழற்சியில் உள்ள மிகவும் பிரபலமான ஐந்து அறிக்கைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்