சரியாக மலம் கழிக்க என்ன செய்ய வேண்டும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எளிதாக மலம் கழிக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மனிதர் தன் ஆயுளில் சராசரியாக ஆறு மாதத்துக்கும் மேல் கழிவறையில் செலவிடுகிறார்.

ஆண்டுக்கு ஒரு மனிதர் சுமார் 145 கிலோ மலம் கழிக்கிறார். மலம் கழிப்பதை எளிதாக்குவது ஒருவர் அமரும் விதம்தான்.

90 டிகிரி கோணத்தில் அமர்ந்து மலம் கழிக்கும்போது பின்பக்க தசைகள் பெருங்குடலை நசுக்கும். இதனால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டு மூலம், மயக்கம் போன்றவை ஏற்படலாம்.

பின்பு ஏன் அமரும் வகையிலான கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன?

கழிவறை பயன்பாடு 6,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரோம் நகரில் 144 பொது கழிவறைகள் இருந்தன.

'ஃபிளஷ்' உள்ள கழிவறை 1592இல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு 'U' வடிவ வளைவு கண்டுபிடிக்கப்பட்டபின் எல்லாம் மாறியது.

இது நேராக கழிவறையின் கீழிருந்து கழிவுகளை நீக்குவதால் இதை நிறுவுவதும் சுலபம். இவ்வாறு அமரும் கழிவறை ஐரோப்பிய நாகரிகத்தின் சின்னம் ஆனது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்