முஸ்லிம் சீக்கிய நல்லெண்ண அடையாளமாக மீட்கப்படும் பாகிஸ்தான் குருத்துவாரா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முஸ்லிம் - சீக்கியர் நல்லெண்ண அடையாளமாக மீட்கப்படும் பாகிஸ்தான் குருத்துவாரா

பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணத்தில் சீக்கிய மதம் நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் பிறந்த மற்றும் இறந்த இடங்கள் இங்குதான் உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, தங்களின் வழிபாட்டுத் தலங்களான குருத்துவாராக்களையும், புனிதத் தலங்களையும் கைவிட்டு விட்டு சீக்கியர்கள் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.

பல ஆண்டுகால புறக்கணிப்புக்குப் பிறகு இந்த இடங்களை புலம்பெயர்ந்த சீக்கியர்களின் உதவியோடு, புனரமைக்க பாகிஸ்தான் அரசு முனைப்பு காட்டுகிறது.

பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஃஜாப்ரி அவ்வாறு மீட்கப்பட்டுவரும் நவ்ஷிரான் விர்கானிலுள்ள குருத்துவாராவை பார்வையிட்டுள்ளார். சீக்கியர்களுக்கு இது மிகவும் முக்கியமான வழிபாட்டு தலமாகும்.

காணொளி தயாரிப்பு: ஷுமைலா ஃஜாப்ரி, பிபிசி நியூஸ், பஞ்சாப், பாகிஸ்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்