இராக் ரகசிய செக்ஸ் சந்தை - இளம் பெண்களை பாலுறவுக்காக விற்கும் முஸ்லிம் மதகுமார்கள் #BBCInvestigation

இராக்கின் ரகசிய செக்ஸ் சந்தை -  பிபிசி புலனாய்வு (காணொளி) 

இராக்கில் ஷியா முஸ்லிம் மத குருமார்கள் '' உடல் சுகத்துக்காக தற்காலிக திருமணம்'' என்ற பெயரில் பெண்களை  பாலியல் சந்தையில் ஈடுபடுத்துவதை பிபிசியின் பிரத்யேகமான புலனாய்வு கண்டறிந்துள்ளது. 

உடல் சுகத்துக்கான திருமணங்களுக்குப் பெண்களையும், சிறுமிகளையும் மணமகள்களாக ஏற்பாடு செய்ய அவர்கள் முன்வந்தனர்.

மத குருமார்கள் பாலியல் தரகு வேலை பார்ப்பதும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்குவதற்கு மத ரீதியிலான ஆசி வழங்குவதும் ஆவணப்படத்தில் தெரிய வருகிறது. பிபிசி புலனாய்வைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். பிபிசி தமிழின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்.

பிபிசியின் இராக் மற்றும் பிரிட்டிஷ் குழுக்கள் 11 மாத காலம் புலனாய்வு செய்து, மதகுருமார்களின் திரைமறைவு செயல்பாடுகள் பற்றி வீடியோக்கள் எடுத்துள்ளன. பாலியல் ரீதியில் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் பெண்களுடனும், `உடல் சுகத்துக்கான மணமக்களை' ஏற்பாடு செய்து தரும் மத குருமார்களுக்குப் பணம் கொடுத்த ஆண்களிடமும் இந்தக் குழுக்கள் கருத்துகளை கேட்டறிந்தன.சிறுமியருடன் உடல் சுகத்துக்கான திருமணம் செய்து கொள்வது சரிதானா என்று சய்யித் ராட்டிடம் புலனாய்வு நிருபர் கேட்டதற்கு, ``தன்னுடைய கன்னித்தன்மையை சிறுமி இழப்பதில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்'' என்று அவர் பதிலளித்தார்.``உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளை அந்தச் சிறுமியுடன் செய்யலாம், உடலை, மார்பகங்களைத் தொடலாம். பிறப்புறுப்பு வழியாக நீங்கள் பாலுறவு கொள்ள முடியாது. ஆனால் ஆசனவாய் வழியாக செய்யலாம்'' என்று அவர் கூறினார். ``சிறுமிக்கு காயம் ஏற்பட்டால் என்னவாகும்'' என்று கேட்டதற்கு, ``அது உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான விஷயம். அவளால் வலியைத் தாங்க முடியுமா, முடியாதா என்பதைப் பொருத்த விஷயம்'' என்று சாதாரணமாக பதிலளித்தார்.

முட்டாஹ்-வுக்கு 12 வயது சிறுமியை ஏற்பாடு செய்வது சரிதானா என்று கர்பாலாவில் மதகுரு ஷேக் சலாவி என்பவரிடம் புலனாய்வு நிருபர் கேட்டார். ``ஆம், ஒன்பது வயதைத் தாண்டியவர்களுக்கு - பிரச்சினை எதுவும் இல்லை. ஷரியா படி எந்தப் பிரச்சினையும் இல்லை'' என்று அவர் கூறினார். அந்தச் சிறுமி கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பது தான் முக்கியம் என்று சய்யித் ராட் போல இவரும் கூறினார். உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளும், மைனர் பெண் ஒப்புக்கொண்டால் ஆசனவாய் வழியான உறவும் அனுமதிக்கப்பட்டது என்று கூறிய அவர், ``உங்கள் விருப்பத்தின்படி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார்.

பிபிசி புலனாய்வு குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து கட்டுரையை படியுங்கள். 

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் #BBCInvestigation

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்