யார் இந்த ஷி ஜின்பிங்? அவரைப்பற்றி சுவாரசியமான தகவல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யார் இந்த ஷி ஜின்பிங்? 10 சுவாரஸ்ய தகவல்கள்

அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பெரும்பாலான ஊடகங்களின் தலைப்புச் செய்தி இதுதான்.

‘சீன அதிபர் ஷி ஜின்பிங் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • 1953ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் பிறந்தவர் ஷி ஜின்பிங்.
  • 2013ஆம் ஆண்டு ஷி ஜின்பிங் சீன அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
  • இவர் ஒரு காலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்.
  • இவரது தந்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் ஆவார்.
  • ஷி ஜின்பிங் தனது இளம் பருவத்தை பெரும்பாலும் குகையிலும், கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்திலுமே கழித்தார்.
Image caption ஷி ஜின்-பிங் இளம் வயதில் இருந்த குகை
  • அவரது மனைவி பெங் லியன் சீனாவில் மிகவும் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகியாக திகழ்ந்தவர். ஷி ஜின்பிங் அதிபரான பிறகுதான் அவரை பலருக்கும் தெரியும். ஆனால், அவரது மனைவி மக்கள் மத்தியில் அதற்கு முன்னதாகவே மிகவும் பிரபலமாக இருந்தார்.
  • சீன அதிபருக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து. அவர் அதிபரான பிறகு சீனப் பள்ளிகளில் கால்பந்து கட்டாயமாக்கப்பட்டது. சீனாவில் கால்பந்து உலகக்கோப்பை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு உண்டு.
  • ஷி ஜின்பிங் பயணிப்பது ஹோங்கி காரில்தான். ஹோங்கி என்றால் செங்கொடி என்று பொருள். சீனாவின் மிக விலை உயர்ந்த இந்தக் காரின் விலை 8 லட்சம் டாலர்களாகும். இதன் எடை 3 டன்கள். நீளம் 20 அடி என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
  • ஷி ஜின்பிங்கின் முதல் மனைவி பிரிட்டனில் வசிக்கிறார்.
  • ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே இவரது தலைமையின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஊழல் செய்பவர்கள் எவ்வளவு பெரிய "புலிகளாக" இருந்தாலும், "ஈ"யாக இருந்தாலும், அதனை தடுப்பேன் என்று உறுதி அளித்தார். எனினும், அவரது அரசியல் போட்டியாளர்கள் ஊழல் செய்வதை வெளிப்படுத்தி, அதனை ஷி, சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்