எகிப்து அகழாய்வு: பழங்கால சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு - மன்னர்கள் குறித்து புதிய தரவுகள் கிடைக்குமா?

சவப்பெட்டிகள் படத்தின் காப்புரிமை எகிப்து தொல்பொருள் அமைச்சகம்
Image caption கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகள்

எகிப்து நகரமான லக்சாருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது.

இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள் கொண்டுள்ளன.

இது தற்போதைய வருடங்களில் கண்டறிந்த மிகவும் முக்கியமான மற்றும் பெரிய கண்டுபிடிப்பு என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த சமயத்தில் வாழ்ந்த மன்னர்கள் குறித்தும், அதன் மூலமாக மக்கள் குறித்தும் புரிந்து கொள்ள இவை உதவும்.

படத்தின் காப்புரிமை எகிப்து தொல்பொருள் அமைச்சகம்
Image caption கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகள்

தீபன் நெக்ரோபோலிஸில் இருக்கும் அசாசிஃபில் இருக்கும் சமாதிகள் பெரும்பாலும் கிமு 664-332 காலத்தில் வாழ்ந்த மன்னர்களுடன் தொடர்புடையவை ஆகும்.

படத்தின் காப்புரிமை எகிப்து தொல்பொருள் அமைச்சகம்
Image caption கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகள்

ஒரு காலத்தில் தொழிற்சாலைகள் நிறைந்து இருந்த பகுதி ஒன்றினை லக்ஸார் மேற்கு சமவெளியில் கண்டறிந்துள்ளதாக கடந்த வாரம் தொல்பொருள் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

இந்த பகுதியில் சேமிப்புக்கான வீடு மற்றும் 18 ஆம் சாம்ராஜ்யத்தின் நாட்கள் குறிக்கப்பட்ட பானைகளும் இருந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்