எஸ்ஸெக்ஸ் கண்டெயினர் லாரியில் இருந்த 39 சடலங்கள்: ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

ஓட்டுநர்

பட மூலாதாரம், facebook

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து 39 சடலங்களை காவல்துறையினர் கைபற்றிய சம்பவத்தில், லாரியின் ஓட்டுநர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, கண்டைனர் லாரியில் 31 ஆண் மற்றும் 8 பெண் சடலங்களை கண்டுபிடித்தப்பிறகு, காவல்துறை 25 வயதாகும் மரிஸ் ராபின்சன் என்னும் அந்த ஓட்டுநரை கைது செய்திருந்தது.

தற்போது, ஆட்கடத்தல், கருப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர், போலீஸ் காவலில் உள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த 39 பேரின் அடையாளங்களை வியட்நாம் நாட்டு மக்கள் வாழும் பகுதியில் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்தது. முன்பு இறந்தவர்கள் சீனர்கள் என்று கருதியது போலீஸ்.

பட மூலாதாரம், PA Media

இறந்தவர்களின் உடல்கள் கண்டெயினரிலிருந்து எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.

கண்டெய்னரில் இறந்தவர்களில் சிலரே அடையாள அட்டைகளும் பிற ஆவணங்களும் வைத்திருந்ததால், அவர்களின் டி.என்.ஏ மற்றும் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டே அவர்களை அடையாளம் காணவேண்டிய சூழலில் காவல்துறை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் வாழும் வியட்நாமை சேர்ந்த மக்களின் அமைப்பான வியட்ஹோம், காணவில்லை என்ற பட்டியலில் இதுவரை தங்களிடம் 20 புகைப்படங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கிறது.

இறந்தவர்களின் பட்டியலில், தங்களின் உறவினர்களும் இருக்கலாம் என்று அஞ்சும் குடும்பங்களிடம் பிபிசி பேசியது. இதில் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்த பாம் தி ட்ரா மை என்னும் 26 வயது பெண்மணி, "என்னை மன்னித்து விடுங்கள். வெளிநாட்டிற்கான என்னுடைய பயணம் தோல்வியில் முடிந்தது." என்று எழுதியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :