பிளாஸ்டிக்கில் இருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா?

  • விக்டோரியா கில்
  • அறிவியல் செய்தியாளர், பிபிசி
பாலித்தீனை மோட்டார் எண்ணெயாக மாற்றுகின்ற புதிய நடைமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாலித்தீனை மோட்டார் எண்ணெயாக மாற்றுகின்ற புதிய நடைமுறை

தனது ஆய்வகத்தில் உலைக்கலனை கென்னத் போயிப்பெல்மெயர் திறந்தபோது, அந்த திரவத்தைப் பார்த்து உண்மையை ``கண்டுகொண்ட” தருணமாக அதனை உணர்ந்தார்.

``நாங்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தோம்'' என்று பிபிசி செய்திப் பிரிவிடம் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இல்லினாய்ஸில் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் போயிப்பெல்மயரும் அவருடைய சகாக்களும், கேரிபேக் தயாரிக்க பயன்படுத்தும் சிதைக்க முடியாத பாலிஎத்திலின் என்ற பிளாஸ்டிக்கின் பிணைப்புகளை உடைக்கக்கூடிய ரசாயன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பாலிமர் ``சிதைக்கப்பட்டு'' திரவமாக மாற்றப்படுகிறது. ஏசிஎஸ் மத்திய அறிவியல் இதழில் இந்தக் குழு, முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டது. பாலிமர் அணுக்களை மெட்டல் நானோதுகள்கள் மூலம் சிதைத்து - ரசாயன திரவமாக மாற்றுவதாக, முன்னேறிய இந்த கிரியா ஊக்கி தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

பட மூலாதாரம், NORTHWESTERN UNIVERSITY

படக்குறிப்பு,

பாலித்தீனை வெட்டுகின்ற பிளாட்டின சிறிய துகள்கள், ரசாயன நீர்மமாக அதனைமாற்றுகிறது.

``இந்தத் திரவத்துக்கு பயன்பாடு, மதிப்பும் இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்'' என்று பேராசிரியர் போயிப்பெல்மெயர் கூறுகிறார். அர்கோன் தேசிய ஆய்வகம் மற்றும் ஆமெஸ் ஆய்வகங்களில் இருந்து சிலரும் இணைந்ததுதான் அவருடைய குழு. இதை வாகன என்ஜின்களில் எண்ணெயாகப் பயன்படுத்த முடியுமா என்று அந்தக் குழு இப்போது ஆய்வு செய்து வருகிறது.

``இந்தப் பொருட்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திற்கும் ஒரு மதிப்பு உள்ளது. சுற்றுப்புறங்களில் அதை நாம் வீசி எறிந்துவிடக் கூடாது. அதை எரித்துவிடவும் கூடாது.''

இந்த ஆய்வு அணுகுமுறை நம்பிக்கை தருவதாக இருந்தாலும், தொடக்க நிலையில்தான் இருக்கிறது - கேரிபேக் மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தை நமது கார்களில் ஊற்றக்கூடிய நாள் விரைவில் வராமல் போய்விடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எந்த வகையில் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க வகையில் மாற்ற முடியும் என்ற பெரிய தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.

பட மூலாதாரம், Justin Sullivan/Getty Images

குப்பையை செல்வமாக மாற்றுவது

ரசாயனத் துறை நிபுணர்கள், ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள வகையில் மாற்ற முடியுமா என்று கண்டறிவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், உலகெங்கும் தினமும் ஒரு மில்லியன் டன் அளவுக்குப் புதிய பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

சாதாரணமாகப் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பாலிமர்களை இணைக்கும் வலுவான நீண்ட பிணைப்புகள்தான், குறிப்பிட முடியாத பயனுள்ள தன்மைகளுக்கு அடிப்படையாக உள்ளன. அவைதான் பிளாஸ்டிக்கின் வலு மற்றும் நீடித்த உழைப்புக்கு இயற்பியல் ரீதியிலான பலத்தைத் தருகின்றன. ஆனால் அவைதான் கெட்ட பெயருக்கும் காரணமாக உள்ளன. அவை அழிவதற்கு மிக நீண்ட காலம் ஆகிறது என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த பிளாஸ்டிக்கை மதிப்புமிக்க ஏதாவது ஒரு பொருளாக மாற்றினால், எரிபொருள் அல்லது புதிய பொருட்களாக மாற்றினால், அது நம்பிக்கை தரும் வணிக முயற்சியாக இருக்கும். ரசாயன மறுசுழற்சி என்று அது கூறப்படும் - இயந்திர முறையில் மறுசுழற்சி செய்வதில் இருந்து இது முழுக்க மாறுபட்டது. நமது பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசும்போது, நாங்கள் அதைத்தான் பெருமளவு சார்ந்திருக்கிறோம். இப்போது பிளாஸ்டிக் கழிவுகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு, உருக்கி, சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. அதே வகையிலான பிளாஸ்டிக்கில் புதிய பொருட்களைத் தயாரிக்க அதைப் பயன்படுத்தலாம்.

இந்த நடைமுறையும் அந்தப் பொருளை அழிப்பதாக இருக்கிறது. எனவே குறிப்பிட்ட முறைகள் வரை பிளாஸ்டிக் பாட்டில்களை இதுபோல மறுசுழற்சி செய்ய முடியும்.

பட மூலாதாரம், Ryan Pyle/Getty Images

ரசாயன மறுசுழற்சி என்பது, ரசாயன ரீதியில் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது - சற்று புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ``பிரிட்டனில் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதன் அங்கமாக ரசாயன மறுசுழற்சி இருக்க வேண்டும்'' என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஹென்றி ராய்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஷேவர் கூறுகிறார்.

ஆனால் இது இயந்திர முறை மறுசுழற்சியைவிட பின்னடைவு கொண்டது, ஏனெனில் இதில் எரிசக்தி அதிகமாக தேவைப்படுகிறது என்று அவர் விளக்குகிறார்.

``இந்த சிறப்பான ஆய்வையும் (நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளது) கூட 300 டிகிரி செல்சியஸில் 30 மணி நேரத்துக்கும் மேல் செய்ய வேண்டியுள்ளது.''

``குப்பைத் தொட்டியில் வெவ்வேறு வகையான கழிவுகள் நமக்குக் கிடைக்கிற நிலையில், கழிவுகள் மூலம் நமக்கு நிறைய கிடைக்க ரசாயன மறுசுழற்சி முறையில் வாய்ப்பு உள்ளது.''

``இவற்றை ஒன்றாக சேர்த்து நாம் நிலைமாற்றம் செய்யும்போது, பிரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போவதால், புதிய பொருள் மதிப்பு மிக்கதாக ஆகிறது.''

படக்குறிப்பு,

பிரிட்டனில் சுமார் 20% பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரத்தால் மீள்சுழற்சி செய்யப்படுகிறது.

தொழிற்சாலை பிளாஸ்டிக் உத்திகள்

இந்த முயற்சியில் தொழிற்சாலைகளில் நிறைய முயற்சிகள் நடக்கின்றன. பிளாஸ்டிக்கை சிதைத்து எரிபொருளாக அல்லது புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கான கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு, தொழிற்சாலை மூலம் லாபகரமான நடைமுறைகளை உருவாக்க முன்னணி ரசாயன தொழிற்சாலை நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாஸ்டிக் எரிசக்தி போன்ற பிரிட்டனை சேர்ந்த புதிய சுற்றுச்சூழல் நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 10 புதிய மின் உற்பத்தி நிறுவனங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளன. பிளாஸ்டிக்கை எரிபொருளாக சிதைப்பதற்கு, ஆக்சிஜன் இல்லாத சூழலில் அதை அதிக வெப்பத்துக்கு ஆட்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பாலிமரின் அணுக்களை சிதைத்து, பழைய அணுக்களாகப் பிரிப்பதன் மூலம், புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் அதை கச்சாப் பொருளாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட வேறு பல தொழில்நுட்பங்களை வெவ்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

பட மூலாதாரம், AFP/Getty Images

இதுதொடர்பாக பெருமளவு முதலீடு செய்யப்படுவதால், புதிதாக உருவாக்கப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் உள்ளன.

உண்மையில், ரசாயன மறுசுழற்சி - நம்பிக்கை தருவதாகவும் முக்கியமானதாகவும் இருந்தாலும் - அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் எந்த வகையில் பயனுள்ளவாறு பயன்படுத்தப் போகிறோம் என்ற புதிருக்கான சிறிய விடையாக இது இருக்கும் என்று பேராசிரியர் ஷேவர் கூறுகிறார்.

``பல பிளாஸ்டிக் பொருட்கள் சிறப்பாக இயந்திர முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன'' என்கிறார் அவர். ``இதே நிலையில் இதைத் தொடர வேண்டும் ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாதபோது, இந்த வலுவான பிணைப்புகளை மீண்டும் கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு நாம் மாற முடியும்.''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :