பாக்தாதி இறந்ததை உறுதிசெய்த ஐ.எஸ்: புதிய தலைவர் அறிவிப்பு மற்றும் பிற செய்திகள்

பாக்தாதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாக்தாதி

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் ஜிகாதி குழுவான ஐ.எஸ் அமைப்பு தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமியை அறிவித்துள்ளது.

முந்தைய தலைவரான அல்-பாக்தாதியின் இறப்பை முதல்முறையாக அது உறுதி செய்துள்ளது.

அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி புதிய தலைவராக இருப்பார் என்று தகவல் சேவை வழங்கும் டெலகிராம் மூலம் ஐ,எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.எஸ். அமைப்பு வளர்ச்சி அடைந்தபோது தொடங்கி, அமெரிக்க படைப்பிரிவுகளாலும், அதன் கூட்டணி படைகளாலும் தேடப்பட்டு வந்த இராக்கியரான பாக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், AFP

வடசிரியாவில் அமெரிக்க மற்றும் சிரியா குர்து ஆயுதப்படையினரால் பாக்தாதி கொல்லப்பட்டபோது, செய்தி தொடர்பாளர் அபு அல்-ஹாசன் அல்-முஹாஜீரும் கொல்லப்பட்டதை வியாழக்கிழமை ஐ.எஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது.

சௌதி அரேபியாவை சேர்ந்த இவர், அடுத்த தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாக்தாதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் காணொளி

அபிஜீத் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ- நோபல் பரிசு பெற்றவர்கள் பயணத்தை தொடங்கிய ராஜஸ்தான் கிராம பள்ளிகள்- #GroundReport

பட மூலாதாரம், Getty Images

1996ஆம் ஆண்டின் குளிர்காலத்தின் தொடக்கம். உதய்பூரைச் சேர்ந்த அஜய் மேத்தா என்ற சமூக சேவகர் தனது தம்பி உதய் மேத்தாவை சந்திக்க அமெரிக்கா சென்றார். எம்.ஐ.டியில் பேராசிரியராக இருந்த உதய் மேத்தா தனது மூத்த சகோதரரை, நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். உதய் மேத்தாவின் நண்பர் ஒருவர் ஏழைகளிடையே ஒரு சிறப்பு சமூக ஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறினார், இதனால் அவர்களது வாழ்க்கை மேம்படும் என்று அவர் கூறினார். அஜய் மேத்தா, அவரது நோக்கத்தையும், வார்த்தைகளையும் புரிந்துகொண்டு, உதய்பூருக்கு வருமாறு அழைத்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தனது சக ஊழியருடன் உதய்பூருக்கு வந்தார். அந்த பேராசிரியர் அபிஜீத் பானர்ஜி. அவருடன் உதய்பூருக்கு வந்தவர் மைக்கேல் கிராமர்.

சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை: காற்றாலை முறைகேடு வழக்கில் தீர்ப்பு

பட மூலாதாரம், ANI

காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது முன்னாள் கணவர், மேலாளர் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் வடவள்ளியில் 2008ஆம் ஆண்டில் இன்டர்நேஷனல் கன்சல்டன்சி அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ், பவர் அண்ட் கனக்ஷன்ஸ் என்ற பெயரில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்திவந்தனர். இந்த நிறுவனம் காற்றாலைகளில் முதலீடு செய்ய ஆலோசனை தரும் நிறுவனமாக சொல்லிக்கொண்டது.

இந்த நிறுவனத்தில் தியாகராஜன் என்ற தொழிலதிபர் 2008ஆம் ஆண்டில் ரூ. 26.5 கோடி ரூபாயை முதலீடு செய்தார். சேலத்தைச் சேர்ந்த இருவர் 11 லட்ச ரூபாயை முதலீடு செய்தனர்.

2009ஆம் ஆண்டில் மற்றொருவர் 6.87 லட்ச ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தார். ஆனால், இதில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

வாட்ஸ்-ஆப் : 'சைபர்-தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இந்தியர்களும் அடக்கம்'

பட மூலாதாரம், PESHKOV / GETTY IMAGES

இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், " என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

அக்டோபர் 31 முதல் காஷ்மீரில் என்னெ்ன மாற்றங்கள் வரும் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் ஜம்மு காஷ்மீருக்கு ``சிறப்பு அந்தஸ்து'' வழங்க அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் வகை செய்தன.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :