பெர்லின் சுவர் ஏன்  கட்டப்பட்டது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெர்லின் சுவர் கட்டப்பட இரண்டாம் உலகப்போர் காரணமானது எப்படி?

பெர்லின் சுவர் விழுந்தது 20ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வாகும். கம்யூனிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சியை இது குறித்தது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை போலவே, கட்டப்பட்டதும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அங்கு கட்டி எழுப்பப்பட்டிருந்த வலுவான சுவர் பெர்லினை மட்டும் பிரிக்கவில்லை. 30 ஆண்டுகளாக இரண்டு வேறுபட்ட அரசியல்-சமூக-பொருளாதார  கொள்கைகளைப் பிரித்தது.  20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 

எதற்காக இந்த பெர்லின் சுவர்?

இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து தோல்வியுற்ற ஜெர்மனியை இரண்டாக பிரிக்க முடிவு செய்தன.  பெர்லின் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பெர்லின் தலைநகரமாக இருந்ததால், தலைநகரத்தையும் பிரிக்க வேண்டிய சூழல் உண்டானது.

முதலாளித்துவ நாடுகள் ஜெர்மனியின்  மேற்கு பகுதியையும், கம்யூனிஸ்ட் நாடுகள் கிழக்கு பகுதியையும் கைப்பற்றின.

ஐரோப்பிய கண்டம் சர்வதேச அரசியல் சண்டைக்கான இடமானது. பனிப்போர் துவங்கியது.

மேற்கில், ஜெர்மனி பெடரல் குடியரசு உருவானது, கிழக்கில் ஜெர்மனி ஜனநாயக குடியரசு உருவாக்கப்பட்டது. 

இது சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாக இருந்தது. பெர்லின் முதலாளித்துவ நாடுகளின் செயல்பாட்டுகளின் மையமானது.

நாளடைவில், கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு இது பெரும் சிக்கலானது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன்  இந்த நகரத்தை உளவு பார்க்கும் தளமாக பயன்படுத்தின.

1949 மற்றும் 1961ம் ஆண்டுக்கு இடையில்,  மேற்கு ஜெர்மனியில் நல்ல வாய்ப்புகளைத் தேடி சுமார் 25 லட்சம் மக்கள் கிழக்கு ஜெர்மனிக்கு தப்பிச் சென்றனர்

இந்த சூழலை நிறுத்த, நகரத்திற்கு இடையே சுவர் எழுப்ப வேண்டுமென கம்யூனிஸ்ட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எனவே, 1961ம் ஆண்டு  ஆகஸ்ட் 13ம் நாள் இரவு,  ஒரு சில மணி நேரத்தில் பெர்லின் சுவர் கட்டியமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இந்த சுவர், வலிமைமிக்கதாக நின்றது. 3.5 மீட்டர் உயரத்தில், எஃகு கம்பிகள் கொண்டு கட்டப்பட்டது.

155 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மேற்கு பெர்லின் முழுவதும் இந்த சுவர் சூழ்ந்திருந்தது. கிழக்கு பெர்லினை சேர்ந்த 5000 பேர் தப்பித்து சென்றனர். தப்பிக்க முயன்ற பலர் எல்லையில் கைது செய்யப்பட்டனர். பலர் உயிரிழந்தனர்.

இந்த சுவர் பெர்லினை முப்பது ஆண்டுகள் பிரித்துவைத்தது.

இது கட்டப்பட்டதைப் போலவே பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதும், இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :