மணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள்

மணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப்பாய்ந்து சாதனை படைத்த கார் படத்தின் காப்புரிமை TWITTER

பிரிட்டனை சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

உலக வரலாற்றில் நிலத்தில் ஓடும் கார்களில் மணிக்கு 965 கிலோமீட்டர் வேகத்தை தாண்டிய ஏழாவது கார் எனும் சிறப்பை இந்த கார் பெற்றுள்ளது.

தற்போது ஜெட் இஞ்சினை பயன்படுத்தி சாதனையை நிகழ்த்தியுள்ள இந்த காரில், ராக்கெட் இஞ்சினைக் கூட பொருத்த முடியும்.

அவ்வாறு, ராக்கெட் இஞ்சினை பொருத்தி அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சோதனையில், தற்போதைய உலக சாதனையாக இருக்கும் மணிக்கு 1,228 கிலோமீட்டர் வேகத்தை இந்த கார் எளிதில் விஞ்சிவிடும் என்று கருதப்படுகிறது.

இலங்கை தேர்தல்: வெல்லப்போவது யார், கடந்த கால தரவுகள் சொல்வது என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் இதுவரை 7 நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

இதில் 80 சதவீதத்தைத் தாண்டி வாக்குப் பதிவுகள் பதிவாகிய இரண்டு சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னர் காணப்பட்ட நிலையில், இந்த முறை 80 சதவீத வாக்குப் பதிவு பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விரிவாக படிக்க: இலங்கை தேர்தல்: வெல்லப்போவது யார், கடந்த கால தரவுகள் சொல்வது என்ன?

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்டாலின்

சென்னையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக வந்துள்ள புகாரை அடுத்து, முரசொலியின் நிர்வாக இயக்குநரான உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு வருமாறு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சென்னை சாஸ்திரி பவனில் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா? உதயநிதிக்கு நோட்டீஸ்

IND Vs BAN டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி

படத்தின் காப்புரிமை Getty Images

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இப்போட்டியில் வென்றதுடன் இந்தியா தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளை ஒரு இன்னிங்ஸ் மற்றும் நூற்றுக்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதில் இரண்டு போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியாகும்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நவம்பர் 14 அன்று தொடங்கியது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் மோமினல் ஹாக் தலைமையிலான வங்க தேச அணியும் மோதின.

விரிவாக படிக்க: மூன்று நாளில் முடிந்த இந்திய - வங்கதேச டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி

சங்கத்தமிழன்: சினிமா விமர்சனம்

படத்தின் காப்புரிமை TWITTER

தீபாவளிக்கு வெளியாகியிருக்க வேண்டிய படம். சற்றுத் தள்ளிப்போய் தற்போது வெளியாகியிருக்கிறது. சைரா நரசிம்மரெட்டி படத்தை சேர்த்தால், இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடித்து வெளியாகும் ஐந்தாவது படம் இது.

தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). அந்த தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள் (ராஷி கண்ணா) முருகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

விரிவாகப் படிக்க: சங்கத்தமிழன்: சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்