ரியான்: யு டியூபில் அதிகம் சம்பாதித்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த 8 வயது சிறுவன்

ரியான்

பட மூலாதாரம், YOUTUBE/RYAN'S WORLD

படக்குறிப்பு,

ரியான்

பொம்மைகள் குறித்து ஆய்வு செய்து காணொளி வெளியிடும் 8 வயது சிறுவன் ரியான், யூ டியூபில் அதிகம் சம்பாதித்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இவரே முதலிடம் பிடித்திருந்தார்.

Ryan's World என்ற யு டியூப் சேனல் வைத்திருக்கும் இந்த சிறுவன், 2019ஆம் ஆண்டில் 26 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளார். 2018ஆம் ஆண்டு 22 மில்லியன் டாலர்கள் வருமானம் இவருக்கு கிடைத்துள்ளது.

டெக்ஸாசில் தனது பெற்றோர் மற்றும் இரட்டை சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் ரியான், யூ டியூபில் தனக்கிருக்கும் 22.9 மில்லியன் சந்தாதாரர்களுக்கு தினம் ஒரு காணொளியை வெளியிடுகிறார்.

குடியுரிமை போராட்டம் நாடு முழுவதும் தீவிரம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

பிகாரில் பஸ் எரிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

ஊடகத்தில் பேசிய மங்களூரு போலீஸ் ஆணையர் பி.ஹர்ஷா, இறந்த இருவரும் எதனால் இறந்தார்கள் என்ற விவரம் அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியும் என்று தெரிவித்தார்.

இறந்தவர்கள் பெயர்கள் ஜலீல் குட்ரொலி (43), நௌஷீன் பெங்கரீ (49) என்பதையும் அவர் கூறினார்.

"ராஜபக்ஷவிற்கு எதிராக இருந்ததற்காகவே கைது செய்யப்பட்டேன்"

பட மூலாதாரம், PATALI / FACEBOOK

படக்குறிப்பு,

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை சிறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2016ம் ஆண்டு இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

"இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறோம்": ஆப்பிரிக்க பெண்கள்

பல்வேறு பொய்கள் சொல்லி, கென்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, பல பெண்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவதை, பிபிசியின் புலனாய்வுக்குழுவான `ஆப்பிரிக்கா ஐ` கண்டறிந்துள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்படும் பெண்கள், புதுடெல்லியில் வாழும் ஆப்பிரிக்க ஆண்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பாலியல் தொழிலில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு, தங்களுடைய வாழ்க்கை முறையை பராமரிக்க, பணம் செலவழிக்க ஆண் கொடையாளர்களை இளம் கென்ய பெண்கள் நாடும் போக்கு குறித்து புலனாய்வு செய்தது ஆப்பிரிக்கா ஐ. அப்போது, நேர்காணல் செய்யப்பட்ட பல பெண்களில் கிரேஸும் ஒருவர்.

பேட் கம்மின்ஸ் - ஒரு பௌலருக்கு 15.5 கோடி ரூபாய் ஏன்?

பட மூலாதாரம், QUINN ROONEY/GETTY IMAGES

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார்.

2015ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரை அதிக தொகையாக உள்ளது.

ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

டெல்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பல அணிகள் மோதிய போதிலும் இறுதியில் 15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: