இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலத்தீன பகுதியில் நடைபெறும் போர் குற்றங்கள் - விசாரிக்க சர்வதேச நீதிமன்றம் முடிவு

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலத்தீன பகுதியில் நடைபெறும் போர் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

பாலத்தீன பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஃபாட்டு பென்சூடா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை, கிழக்கு ஜெருசேலம், காசா பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் குற்ற வழக்கை 2015ஆம் ஆண்டு பாலத்தீனியர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படையற்றது என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஃபாட்டு பென்சூடா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, "சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் உறுப்பினராக எல்லை. இஸ்ரேல் நாட்டை சட்டபூர்வமற்றதாக்கும் ஓர் அரசியல் தந்திரம் இது என்று தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு

1969ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரில் மேற்கு கரை, காஸா, கிழக்கி ஜெருசேலம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

"விசாரணையே தேவை இல்லை என்று நம்பும் அளவுக்கு உறுதியான காரணங்கள் ஏதும் இல்லை," என ஃபாட்டு பென்சூடா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

விசாரணையை மேற்கொள்வதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார்.

மத்திய கிழக்கு விவகாரங்களைக் கவனித்து வரும் பிபிசியின் அலன் ஜான்ஸ்டன்,"அவர் விசாரணையைச் செய்ய முடிவு செய்துவிட்டால், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனியர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய வேண்டும்," என்கிறார்.

இறையாண்மை உள்ள நாடு

"இறையாண்மை உள்ள ஒரு நாடு தொடுக்கும் வழக்குகளைத்தான் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க முடியும். ஆனால், பாலத்தீனம் அப்படி இல்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடந்த குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. அதாவது ஜூலை மாதம் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன ஆயுதக்குழுக்கள் இடையே நடந்த சண்டையில் 1,462 பொதுமக்கள் உட்பட 2,251 பாலத்தீனியர்கள் பலியானார்கள். இஸ்ரேல் தரப்பில் 6 பொதுமக்களும், 67 ராணுவத்தினரும் பலியானார்கள்.

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை பாலத்தீனம் வரவேற்றுள்ளது. மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெரூசேலம் ஆகிய பகுதிகளில் 140 இஸ்ரேல் குடியிருப்புகள் உள்ளன.

இஸ்ரேல் மனித உரிமைக் குழுவான பி'டிசெலமுன் இந்த நகர்வை வரவேற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: