பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் மகன் பண மோசடியில் ஈடுபட்டாரா? மற்றும் பிற செய்திகள்

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ மகன் பண மோசடியில் ஈடுபட்டாரா?

பட மூலாதாரம், Getty Images

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் மகன் பண மோசடியில் ஈடுபட்டாரா?

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் மகன் ஃப்ளவியோ தன் மீதான பண மோசடி புகார்களை மறுத்துள்ளார்.

ஃப்ளவியொ தனது சாக்லேட் கடையின் மூலம் மக்கள் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியான சூழலில் அவரது கடை உள்ளிட்ட 24 இடங்களில் இந்த வாரத் தொடக்கத்தில் சோதனைகள் நடந்தன.

பொல்சனாரூவின் முன்னாள் மனைவிக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.

இது குறித்து வியாழக்கிழமை பேசிய சயீர் பொல்சனாரூ, "நான் எனக்காக மட்டும்தான் பதில் சொல்ல முடியும்," என்றார்.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரேசில் சென்று இருந்தபோது பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பொல்சனாரூ இந்தியா வரயிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? - மலேசிய பிரதமர் கேள்வி

பட மூலாதாரம், VLADIMIR SMIRNOV/GETTY IMAGES

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மலேசியப் பிரதமர் மகாதீர் மொகமது தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே மக்கள் பலியாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மலேசியப் பிரதமர் மீண்டும் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெறுவதை துரிதப்படுத்தவே இந்தச் சட்டத்திருத்தம் உதவும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்பட வாய்ப்புள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல பகுதிகளில் போராட்டம் வன்முறையாக உருமாறியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர் சரோஜ் சிங், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியுடன் நடத்திய நேர்காணலை கேள்வி-பதில் வடிவில் காண்போம்.

குடியுரிமை திருத்த சட்டம்: உத்தரப் பிரதேசத்தில் போராடிய 5 பேர் பலி

பட மூலாதாரம், STR VIA GETTY IMAGES

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அஸ்வதி தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அவர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில்தான் உயிரிழந்தனரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

பர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரஃப்புக்கு தேசதுரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளன.

பர்வேஸ் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், முஷாரஃபுக்கு ஆதரவாக யார் வழக்காடப் போகிறார்கள்? இது குறித்து சில பாகிஸ்தான் சட்ட நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்க பிபிசி முயற்சி மேற்கொண்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: