டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜெர்மனி - காரணம் தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

Trump

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் ஜெர்மனி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்உக்கு எதிராகக் காட்டமான கருத்துகளை ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய இருநாடுகள் வெளியிட்டுள்ளன. ஒரு எரிவாயு பைப்லைன் நிறுவனத்துக்கு எதிராகப் பொருளாதார தடைவிதித்ததே இதற்குக் காரணம். ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யக் கடலுக்கு அடியே குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. நோர்ட் ஸ்ட்ரீம் 2 என அழைக்கப்படும் அந்த திட்டத்தின் மதிப்பு 11 பில்லியன் டாலர்கள். இந்த திட்டத்தை அபாயகரமானதாகக் கருதுகிறது அமெரிக்கா.

பட மூலாதாரம், Getty Images

அதாவது ரஷ்யாவின்பிடி ஐரோப்பாவில் இறுகும் என அஞ்சுகிறது அமெரிக்கா. 1225 கி.மீ நீளம் கொண்ட இந்த கேஸ் பைப்லைன் திட்டத்தின் காரணமாக ரஷ்யாவின் பணயகைதியாக ஜெர்மன் மாற வாய்ப்புள்ளது என அமெரிக்க தெரிவித்துள்ளது. ஆனால், தமது உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாமென இருநாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் இந்த முடிவை விமர்சித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல்: பதவியில் பெண்கள்; அதிகாரத்தில் ஆண்கள் - இந்த நிலை மாறுமா?

பட மூலாதாரம், Getty Images

உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.

2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக 33 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தன.

மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால், 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

'மன்னிப்பு' - ஊர் பற்றி எரியும் போது விடுமுறை சென்ற ஆஸ்திரேலியா பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரியும் போது விடுமுறை சென்றதற்காக மன்னிப்பு கேட்டார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்.

விடுமுறை சென்றது சர்ச்சையானதை அடுத்து தனது ஹவாய் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் அவர்.

ஆஸ்திரேலியாவில் மூன்று மாநிலங்களில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.இதன் காரணமாக சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

குடியுரிமை திருத்த சட்டம்: 3 கோடி குடும்பங்களை நாட பாஜக முடிவு

பட மூலாதாரம், BIJU BORO VIA GETTY IMAGES

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில் மூன்று கோடிக்கும் மேலான இந்தியக் குடும்பங்களை நாடும் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த இந்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க சிறப்பு பிரசார இயக்கம் ஒன்றை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இதன்போது மூன்று கோடிக்கும் மேலான குடும்பத்தினரை பாஜகவினர் தொடர்பு கொள்வார்கள் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் காவல்துறை என்கவுண்டரில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: