கிறிஸ்துமஸ்: வங்கியில் கொள்ளை அடித்து பணத்தை வீதியில் எறிந்து வாழ்த்து சொன்ன முதியவர்

வங்கியில் கொள்ளை அடித்து மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்த முதியவர்

பட மூலாதாரம், COLORADO SPRINGS POLICE

தாடி வைத்த இந்த வெள்ளை முதியவர் இரண்டு தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்தார். பின் அந்த பணத்தை உற்சாகமாக வீதியில் தூக்கி எறிந்து அங்கு சென்று கொண்டிருந்த மக்களுக்கு உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வயதான ஒரு வெள்ளை முதியவர் கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியைத் திங்கட்கிழமை மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து, அந்த பணத்தை வீசி எறிந்தார்," என்று கூறுகின்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

"பணத்தை எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தார்," என்று மேலும் கூறினார்.

பின் அந்த பகுதியிலிருந்த ஸ்டார்பக்ஸ் காஃபி கடை அருகே கைது செய்யப்படுவதற்காகக் இந்த முதியவர் காத்திருந்தார்.

இந்த செயலில் ஈடுபட்டவர் 65 வயதான டேவின் வெயின் ஆலிவர் என கூறுகிறது கொலொராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :