மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் வேடமிட்ட பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
வால்ட் டிஸ்னி பாத்திரங்களான மிக்கி மவுஸ் (வலது) மற்றும் மின்னி மவுஸ் (இடது)
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை வால்ட் டிஸ்னி கதாபாத்திரங்கள். மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் போன்று டிஸ்னி பாத்திரங்களாக வேடமிடும் நபர்களிடம் சுற்றுலாப் பயணிகள் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பெண்கள் இந்த புகாரை கொடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒர்லேண்டோ, ஃப்ளோரிடா மாகாணங்களில் உள்ள தீம் பார்க்குகளில் இதுபோன்று நடந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
மிக்கி மவுஸ் போன்று வேடம் அணிந்த பெண்ணை ஒரு மூதாட்டி தன்னை தலையில் அடித்துவிட்டு சென்றதால் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மின்னி மவுஸ் மற்றும் டொனால்ட்டு டக் வேடம் அணிந்த இரு பெண்கள், தங்களை சிலர் தவறான முறையில் தொடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்
பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை அன்று நாள்முழுவதும் இணைய சேவை முடக்கம் நீடித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. எனினும், உத்தர பிரதேசத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகின.
விரிவாக படிக்க: உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - மீண்டும் தலையெடுக்கிறதா போராட்டங்கள்?
கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை
பட மூலாதாரம், Getty Images
கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை அளித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன்படி சாகும் வரை தூக்கு தண்டனையும், போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 201ன்படி ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதமும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விரிவாக படிக்க: கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை
உத்தரப்பிரதேசத்தின் மௌனத்துக்கு காரணம் காவல்துறை மீதான அச்சமா?
பட மூலாதாரம், Reuters
முசாஃபர்நகர், மீரட், பிஜ்னோர், சம்பல், மொராதாபாத், கான்பூர் போன்ற நகரங்களில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அதில் 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்,
கிட்டத்தட்ட அனைவரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்கள். ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளர்; நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விரிவாக படிக்க: உத்தரப்பிரதேசத்தின் மௌனத்துக்கு காரணம் காவல்துறை மீதான அச்சமா?
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 76.19 சதவீதம் வாக்குப் பதிவு
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 515 ஊராட்சி வார்டுகளில் 260 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
விரிவாக படிக்க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 76.19 சதவீதம் வாக்குப் பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: