டெக்சாஸ் தேவாலய துப்பாக்கிச்சூடு: நேரலை செய்த தாக்குதல்தாரி - என்ன நடக்கிறது அங்கே?

டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி நேரலை நடத்திய நபர் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

துப்பாக்கியுடன் ஒரு நபர் வெஸ்ட் ஃபிரிவே தேவாலயத்தின் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை சமூகவலைத்தளங்களில் நேரலையும் செய்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் வெளியான நேரலையில் தேவாலயத்திற்கு எப்போதும் வந்து பிரார்த்தனையில் ஈடுபடும் நபர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவதாக மற்றொரு நபரைத் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கொன்றவுடன், தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேறொரு பக்தர் மற்றவர்களைப் பாதுகாக்க அந்த மர்ம நபரைத் துப்பாக்கியால் சூட்டு கொன்றார்.

ஆனால் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தேவாலயத்தின் சபை உறுப்பினர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். வெளியான நேரலை காணொளியில், தேவாலயம் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களின் அலறல் சத்தமே கேட்டது. பலர் தேவாலயத்திலிருந்த மேஜைக்குக் கீழ் பதுங்கிக்கொண்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

''தேவாலயத்தின் பாதுகாப்புக் குழுவில் தேவாலய உறுப்பினர்களும் தன்னார்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு முறையாகத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த இந்த நபர் மீது பாதுகாப்புக் குழுவிற்கு நிறையச் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால் இன்று பல உயிர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது'' என்று தேவாலயத்திலிருந்த அமைச்சரான ஜாக் கும்மிங்ஸ் கூறுகிறார்.

இந்த சம்பவம் குறித்து டெக்சாசின் ஆளுநர் ரெக் போட் கூறுகையில்,''வழிபாடு நடைபெறும் இடம் புனிதமாக இருக்கவேண்டும், இந்த நேரத்தில் நிறைய உயிரிழப்புகளைத் தடுக்க தேவாலய உறுப்பினர்கள் அந்த துப்பாக்கி ஏந்திய நபரைச் சுட்டுக் கொன்றதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டெக்சாசில் உள்ள வழிப்பாட்டு தளங்களில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அனுமதிக்கப்படுவதாகச் சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்