இரான் - அமெரிக்கா மோதல்: யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?

இரான் தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்கள் யார் ? படத்தின் காப்புரிமை Getty Images

இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார், இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இவ்வாறான தாக்குதலால் யார் லாபம் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? அடுத்து இரானும் அமெரிக்காவும் என்ன செய்ய போகின்றன?

இங்கே வெற்றியோ தோல்வியோ அடைந்தது யார்?

இரானுக்கு குறுகிய கால ஆதாயம்

இரான் தனது அதிகாரம் மிக்க முக்கிய ராணுவ தளபதியை இழந்த போதிலும், காசெம் சுலேமானீயின் மரணத்தால் இரானுக்கு குறுகிய கால ஆதாயம் உள்ளது.

சுலேமானீயின் மரணம், அதன் பிறகு நடந்த இறுதி ஊர்வலம் சர்வதேச அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் இருந்து டெஹ்ரான் மக்களின் கவனம் மாறியுள்ளது.

இரானின் பிளவுபட்ட அரசியல் போக்கை மீறி, நெருக்கடி நேரத்தில் தங்களால் ஒன்று சேர முடியும் என்பதை இந்த முறை இரான் மக்கள் சர்வதேச அரங்கில் நிரூபித்துள்ளனர்.

2018ல் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்ப் விலகியதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைக்கு பிறகு இரான் மிகுந்த பொருளாதார அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை இரான் வீழ்த்தி, கப்பல் டேங்கர்களையும் இரான் தடுத்து வைத்ததால் இரான் அமெரிக்கா இடையிலான மோதல் அதிகரித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் சௌதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரானுக்கு தொடர்பு உள்ளது என கூறப்பட்டது. ஆனால் அதை இரான் தொடர்ந்து மாறுகிறது.

இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகளை குறிவைத்து இரான் ஏற்கனவே ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டது. இதன் பிறகு பதிலடி கொடுப்பதை தவிர்த்துவிட்டு, மக்களின் அனுதாப அலைகளை மையமாக வைத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான பதற்றத்தை எதிர்கொள்ள தயாராவது இரானுக்கு நன்மை அளிக்கும்.

அதே சமயம் இரான் மறுபடியும் பதில் தாக்குதல் நடத்தினால், நிச்சயமாக இரான் வெற்றி அடைந்ததாக கருதப்படாது.

எப்போது எங்கே இரான் மறுபடியும் தாக்குதல் நடத்தப்போகிறது என்பதை பொருத்துதான் சற்று வலிமை குறைந்த ராணுவ பலம் கொண்ட இரான் எவ்வாறு தனது அதிகாரம் மிக்க ராணுவ தளபதியை இழந்த பிறகு அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளப்போகிறது என்பது தெரியவரும்.

அமெரிக்காவிற்கு பாதிப்பா?

இரானின் ராணுவ வலிமையைக் குறைப்பதில் டிரம்ப் நிர்வாகம் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதே சமயம் நவம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலை டிரம்ப் எதிர்கொள்ள வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனால் சௌதி அரேபியா மற்றும் இஸ்ரேல் போன்ற நேச நாடுகளிடம் வலிமை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.

ஆனால் அமெரிக்கா மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும். இன்னும் பல அமெரிக்க உயிர்களை இழக்க நேரிடும். நீண்டகாலமாக நடைபெற்று வரும் மற்றொரு பிராந்திய யுத்தத்தைத் தூண்டக்கூடும். இது மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இராக்கின் ஷியா படைகள்

இராக்கில் உள்ள இரான் ஆதரவு ஷியா போராளிகள் இந்த நெருக்கடி நிலை நீடிக்கும் வரை பயனடைய கூடும்.

சுலேமானீயின் மரணத்தால், இராக்கிலேயே ஷியா போராளிகள் தங்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை நிரூபிக்கும் நேரமாக தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது ஷியா போராளிகள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகளை வெளியேற்ற வேண்டும் என்பது ஷியா போராளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

ஐ.எஸ் மற்றும் அல்-கய்தா போன்ற பயங்கரவாத குழுக்கள் இராக்கில் வலிமை பெரும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இராக்கில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல்

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட நாட்களாக மோதல் நிலவுகிறது. யூத அரசை விளக்கி வைக்க வேண்டும் என்பது இரானின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது.

இஸ்ரேல் தரப்பிற்கு இன்னும் பல அச்சுறுத்தல்கள் இன்றும் உள்ளன. இஸ்ரேலின் விரோதிகளான லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் ஆகியோருக்கு இரான் அளிக்கும் ஆதரவும் இதில் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

எவ்வாறாயினும், சுலேமானீயின் மரணம் இரானைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் வளர்ந்து வரும் நோக்கத்தைக் குறிக்கிறது.

அமெரிக்காவின் தலையீடு , இஸ்ரேலில் அதிகரிக்கும் இரானின் வலிமையை மட்டுப்படுத்தும் என்பதால், இஸ்ரேல் இந்த சூழலை சாதகமாக அணுகுகிறது.

இஸ்ரேல் அமெரிக்காவுடன் நின்று அமைதி, பாதுகாப்புக்காக போராட்டம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளின் போராளிகள்

இரான் - அமெரிக்கா இடையேயான மோதலால், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

படத்தின் காப்புரிமை Reuters

குறிப்பாக இராக், லெபனான், மற்றும் இரானில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

அரசாங்கங்கள் ஒரு படி மேலே சென்று அரசியல் செயல்பாட்டாளர்கள் மீதான வன்முறைகளை நியாயப்படுத்தவும், அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருக்க இந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தலாம்.

சௌதிஅரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்

சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ஹோர்முஸ் நீரிணையில் நடந்த கப்பல் தாக்குதல் மற்றும் சௌதி எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல் என இரண்டு தாக்குதகளால் இரு நாடுகளும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தாக்குதலுக்கு பின்னணியிலும் இரான் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுவரை இரான் இந்த இரண்டு தாக்குதலுக்கும் பொறுப்பேற்கவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய அரபு நாடுகள் தொடர்ந்து டெஹ்ரானுடனான நிலைமையை எளிதாக்க முயல்கிறது. அதே நேரத்தில் சௌதி அரேபியா அமெரிக்க அரசின் பிடியில் உள்ளது.

சுலேமானீயின் மரணத்திற்கு பிறகு, சௌதி பாதுகாப்பு அமைச்சர் டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு சென்றதால், இரு நாடுகளும் அமைதியை வலியுறுத்தி அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள்

இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைக்க ஏற்கனவே போராடி வரும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையில் மோசமாக சிக்கிக்கொண்டுள்ளன.

அமெரிக்க அரசு ட்ரோன் தாக்குதல் குறித்து இங்கிலாந்துக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கப்படவில்லை. இது தற்போது நிலவும் பதற்றங்கள் காரணமாக இருக்கலாம் அல்லது குறைந்த பட்சம் தகவல் பரிமாற்றம் இல்லாததையும் இந்த நிலை குறிக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நடந்த அரபு எழுச்சி தூண்டிய ஆளுகை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்பதை சுலேமானீயின் கொலை நினைவூட்டுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்