இரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம்: ’ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும்’ - அதிபர் ருஹானி

ருஹானி படத்தின் காப்புரிமை Getty Images

இரான் ராணுவம் தவறுதலாக உக்ரைன் விமானத்தை எப்படி சுட்டு வீழ்த்தியது என்பது குறித்து மேலும் விளக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஹாசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃப், "இரான் மக்களுக்கு பல நாட்களாக பொய் கூறப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கும், அதிபருக்கும்கூட எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இராக்கிய இறையாண்மையை மீறி, எங்கள் தலைமை தளபதியை அவர்கள் படுகொலை செய்தபோது, இராக்கில் உள்ள வீதிகளில் மக்கள் நடனமாடுவார்கள் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்வீட் செய்தார். இது அவரின் அறியாமை மற்றும் ஆணவத்தை காட்டுகிறது. நீங்கள் அறியாமை மற்றும் ஆணவத்துடன் செயல்படும்போது, அது அழிவாக மாறுகிறது,'' என ரைசினா டைலாக் 2020 நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியத் தலைநகர் புது டெல்லி வந்துள்ள ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தங்களிடம் அதிகமான அதிகாரம் இருக்கும்போது அமேரிக்கா ஆணவத்தோடும் அறியாமையோடும் செயல்படுவதாக இரானின் வெளியுறவு துறை அமைச்சர் ஜவாத் ஜரீஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

"இராக்கிய இறையாண்மையை மீறி, எங்கள் தலைமை தளபதியை அவர்கள் படுகொலை செய்தபோது, இராக்கில் உள்ள வீதிகளில் மக்கள் நடனமாடுவார்கள் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்வீட் செய்தார். இது அவரின் அறியாமை மற்றும் ஆணவத்தை காட்டுகிறது. நீங்கள் அறியாமை மற்றும் ஆணவத்துடன் செயல்படும்போது, அது அழிவாக மாறுகிறது,’’ என ரைசினா டைலாக் 2020 நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியத் தலைநகர் புது டெல்லி வந்துள்ள ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.

இரானின் அண்டை நாடான இராக்குக்கு காசெம் சுலேமானீ அரசுமுறை பயணம் மேற்கொண்டியோருந்தபோது, இராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து அமெரிக்கா அவரை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்ததை, டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஜவாத் ஜரீஃப் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Ani
Image caption இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ஜவாத் இன்று சந்தித்தார்.

சுலேமானீ கொலைக்கு பிறகு உக்ரைன் பயணிகள் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது குறித்து பேசிய அவர், "பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளோம். ஒரு விபத்தாக இந்த சம்பவம் நடைபெற்றாலும், இதில் இறந்துபோன சுமார் 180 பேரும் இளம் வயதினர். இது ஏன் நடைபெற்றது? ஏனெனில் அங்கு நெருக்கடி இருந்தது. எங்கள் தவறை உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளோம். மனிதர்கள் சில நேரம் மன்னிக்க முடியாத தவறுகளை செய்யலாம். ஆனால் விமானம் குழப்பமான சூழலில் சுட்டு வீழ்த்தப்பட்டது,’’ என ஜவாத் ஜரீஃப் தெரிவித்தார்.

இரான் ராணுவ பலத்தை குறைப்பதில் ஆர்வம் கொண்ட நாடு. தற்போது ராணுவ செலவினங்களும் அதிகரிக்கிறது. தற்போது இரான் அமைதி ஒன்றேயே எதிர்பார்க்கிறது என்றும் ஜவாத் ஜரீஃப் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கருடன் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜரீப்

ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான மிக சக்தி வாய்ந்த நபர் சுலேமானீ. அதனால் அவர் மறைவை ஐ.எஸ் கொண்டாடுகிறது. டிரம்ப் மற்றும் பாம்பேயோவும் கொண்டாடுகின்றனர். ஆனால் இரான் மட்டுமல்லாது இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒன்பது மில்லியன் மக்கள் சுலேமானீ கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை நாங்கள் எப்படி தூண்டி விட்டிருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''அமெரிக்க படைகள் இராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என நாங்கள் கூறவில்லை. இராக் அரசுதான் கூறியது. இராக் நாடாளுமன்றம்தான் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அமெரிக்கா எப்போதும் அரபு பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்ததில்லை,'' என இராக்கை ஜவாத் ஜரீப் விமர்சிக்கிறார்.

’’தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இராக்கில் அமெரிக்கா என்ன கொண்டுவந்தது? பாதுகாப்பா? இல்லை. எங்களுக்கும், எங்கள் பிராந்தியத்திற்கும் பஞ்சத்தைதான் கொண்டு வந்தது. ஆப்கானித்தானில் தங்கள் படைகளை நிலைநிறுத்த 7 டிரில்லியன் டாலர்கள் செலவழித்ததாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

’’ஆப்கானிஸ்தானிற்குள் அமெரிக்கா படைகளை நிலை நிறுத்துவது ஆஃப்கனின் பிரச்சனை. இராக்கில் அமெரிக்கா படைகளை குவிக்கிறதா? நாங்கள் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் இராக் இறையாண்மையை மீறி, இராக்கின் ஒரு பிராந்தியத்திற்குள், அந்நாட்டிற்கு அரச விருந்தினராக வந்த ஒருவரை கொலை செய்வது எப்படி சரியாகும்,’’ என ஜவாத் ஜரீப் அமெரிக்காவை விமர்சித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

‘’இராக்கின் ராணுவத் தளம் ஒன்றை பயன்படுத்தி, இராக்கின் அரசு விருந்தினரையே கொலை செய்துள்ளனர். இராக்கியர்களின் நிலையிலிருந்து யோசித்து பாருங்கள். நாங்களும் பதில் தாக்குதல் நடத்தினோம் என்று சிலர் கூறலாம். ஆனால் நாங்கள் எங்கள் தற்காப்புக்காகத்தான் தாக்குதல் நடத்தினோம்.‘’

‘’அமெரிக்காவுக்கு எதிராக போரை தூண்ட முயற்சி செய்ததாக சுலேமானீ மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், அமெரிக்க சிவில் ஊழியரை கொலை செய்ததாக 25 இராக்கிய பாதுகாப்பு படையினரை அமெரிக்கா கொன்றுள்ளது. இந்த விகிதத்தை ஒப்பிட்டு பாருங்கள். இதை எதிர்த்து உண்டான மக்கள் போராட்டங்களை மட்டுப்படுத்தவும்தான் சுலேமானீ இராக் சென்றார். அவர் அரசுமுறைப் பயணமாக மட்டும் இராக் செல்லவில்லை, ‘’ என அமெரிக்க மீது குற்றம்சாட்டுகிறார் ஜவாத் ஜரீப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்