பராகுவே சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகள்: அதிகாரிகளை திசை திருப்ப மணல் மூட்டைகள் மற்றும் பிற செய்திகள்

பராகுவே சிறையில் இருந்து தப்பிய 75 கைதிகள் படத்தின் காப்புரிமை PARAGUAY'S ABC COLOR

பிரேசில் எல்லையில் அமைந்துள்ள கிழக்கு பராகுவே நகரில் உள்ள சிறையில் இருந்து 75 கைதிகள் தப்பியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறை காவலர்கள் உதவியோடு சிறையின் பிரதான வாயில் வழியாகவே கைதிகள் சுதந்திரமாக தப்பி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் சிறையின் உள்ளே ஒரு சுரங்கப்பாதை தோண்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் தப்பிச் சென்ற பாதையை திசை திருப்பவும் இவ்வாறு சுரங்கப்பாதையை தோண்டி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

தப்பிச் சென்ற கைதிகள் பிரேசிலின் மிகப்பெரிய கிரிமினல் கும்பல்களை சேர்ந்தவர்கள் என்று பிரேசிலின் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பராகுவே, பொலிவியா மற்றும் கோலம்பியா உள்ளிட்ட இடங்களில் போதைபொருள் கடத்துதல் ஆயுத கடத்தலில் ஈடுபடும் 30,000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலர் குற்றச்செயல்களில் குழுக்களாக செயல்படுகின்றனர்.

படத்தின் காப்புரிமை PARAGUAY'S ABC COLOR

தப்பிய கைதிகள் குறித்து விசாரணை நடத்தியபோது சிறையில் உள்ள அரை ஒன்றில் 200 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சுரங்கப்பாதை வழியாக கைதி ஒருவர் தப்பிக்க முயன்றபோது பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறையை நிர்வகிக்கும் இயக்குனர் விடுமுறையில் இருந்ததால், கடந்த சில நாட்களில் சிறிய குழுக்களாக கைதிகளை சிறை கண்காணிப்பாளர்கள் தப்பிக்க வழிவகை செய்திருக்கலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.

பிரேசில் மற்றும் பராகுவே நகரை இணைக்கும் சாலைகளில் நிறைய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

படத்தின் காப்புரிமை TWITTER.COM/AIMIM_NATIONAL

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு "இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள்தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மைதான்" என்று ஒவைசி பதில் அளித்துள்ளார் .

முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவின் வளர்ச்சியை உறுதிபடுத்த, இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, "இவ்வாறு கூறியதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. பல பாஜக தலைவர்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே ஆர்எஸ்எஸ்-க்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

விரிவாக படிக்க:"இந்தியாவின் பிரச்சனை மக்கள் தொகை அல்ல, வேலைவாய்ப்பின்மைதான்" - அசாதுதீன் ஒவைசி

சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்

படத்தின் காப்புரிமை FENG VIDEO

கடந்த அக்டோபர் மாதம் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஹுயானின் பின்னணி குறித்து தெரிந்த உடன் அவருக்கு அந்நாடு முழுவதுள்ள மக்கள் நிதியுதவி செய்தனர்.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் சொற்ப பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த அவரது உடல் எடை வெறும் 20 கிலோதான்.

தன் தந்தையும், பாட்டியும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குரிய பணமில்லாததால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்று வு ஹுயான் அளித்த விளக்கம் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும், தனக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலை நேர்ந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த வு, கடைசி முயற்சியாக ஊடகத்தின் வாயிலாக தனது கோரிக்கையை மக்களிடையே முன்வைத்தார்.

விரிவாக படிக்க:சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்

காஷ்மீரில் முடிவுக்கு வந்த தொலைத்தொடர்பு முடக்கம்; செல்பேசி சேவைகள் மீண்டும் தொடக்கம்

படத்தின் காப்புரிமை Getty Images

இனி ப்ரீபெய்டு செல்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் செயல்படும்.

அத்துடன், இன்று, சனிக்கிழமை முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் குப்வாரா மற்றும் பந்திபோரா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஜம்மு பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 2ஜி இணையதள சேவைகளும் தொடங்கியுள்ளன.

இணையதள சேவைகளைப் பயன்படுத்தும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து உரிமையில் ஓர் அங்கம் என்றும், காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவுகளை உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது.

விரிவாக படிக்க:காஷ்மீரில் முடிவுக்கு வந்த முடக்கம்; செல்பேசி சேவைகள் மீண்டும் தொடக்கம்

அமர்நாத்: 'இந்து கோயிலை 500 ஆண்டுக்கு முன் அடையாளம் கண்ட இஸ்லாமியர்'

படத்தின் காப்புரிமை Getty Images

சரித்திரத்தில் பின்னோக்கி சென்று பார்த்தால், உள்ளூர் முஸ்லிம்கள் மற்றும் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கும் உள்ள தொடர்பு நன்றாக புரியும்.

திங்கட்கிழமையன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில், அமர்நாத்துக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஏழு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்க தரிசனத்திற்காக ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

60 வயதான குலாம் ஹசன் மலிக், கிராமத்தில் வசிப்பவர், அவர் தனது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார்.

விரிவாக படிக்க:அமர்நாத்: 'இந்து கோயிலை 500 ஆண்டுக்கு முன் அடையாளம் கண்ட இஸ்லாமியர்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: