அமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை மற்றும் பிற செய்திகள்

polygamy

பட மூலாதாரம், JackF / getty images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும்.

எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது.

தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்ந்து பெரும் குற்றமாக நீடிக்கும்.

அந்த மாகாணத்தின் பிரதிநிதிகள் சபை இந்த சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த சபையின் ஒப்புதலுக்கு பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும்.

கீழடி நாகரிகம்: ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கியது

மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்று (புதன்கிழமை) முதலமைச்சரால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரை இந்தப் பணிகள் நடைபெறுமெனத் தெரிகிறது.

MH370 விமானம் மாயமானது எப்படி?

பட மூலாதாரம், Feng Li / Getty

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 'எம்எச்-370' விமானம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு

பட மூலாதாரம், MR MEDIA

படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

"கலை - கலாசாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது"

காணொளிக் குறிப்பு,

"இசையிலும் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது": டி.எம். கிருஷ்ணா

மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள் என்கிறார் Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :