கொரோனா வைரஸ்: 10 நாடுகள், 3000 மரணம் - உலகம் வெல்லுமா? - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

பட மூலாதாரம், Getty Images
நேரடியாக சொல்ல வேண்டுமானால் கொரோனாவின் கொட்டத்தை யார் அடக்குவார் என்ற கேள்விதான் இப்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக இருக்கிறது.
இதுநாள் வரை கொரோனா வைரஸால் 3000 பேர் இறந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை மேலும் 42 அதிகரித்து இருக்கிறது. இதுவரை சீனாவில் மட்டும் 2912 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலான மரணங்கள் சீனாவின் ஹூபே மாகாணத்தில்தான் பதிவாகி இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
சரி கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
- கொரோனா வைரஸ் காரணமாக இப்போதுவரை 10 நாடுகளில் 3000 பேர் பலியாகி உள்ளனர். பெரும்பாலான மரணங்கள் சீனாவில்தான் என்றாலும், தென்கொரியா, இரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் கணிசமான பேர் பலியாகி இருக்கிறார்கள்.
- இரானில் 50க்கும் அதிகமான பேரும், இத்தாலியில் 30க்கும் அதிகமான பேரும் பலியாகி உள்ளனர்.
- கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இப்போது வரை 90 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. பிரிட்டனில் இதுவரை 36 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
- உலகின் அனைத்து திசைகளிலும் கொரோனா பரவி இருக்கிறது. கம்போடியா தொடங்கி கத்தார் வரை. சீனா தொடங்கி அமெரிக்கா வரை என எல்லா கண்டங்களிலும் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.
- கொரோனாவால் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை தாண்டியவர்கள்.
- இத்தாலியில் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
- சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியாவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குமட்டும் 3081 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
- தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- அறுபது வயதை தாண்டியவர்களைதான் கொரோனா வைரஸ் சுலபமாக தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.
- கொரோனா வைரஸ் காரணமாக சீனா உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தும்.
பிற செய்திகள்:
- ‘உள்ளூரில் புலி; வெளியூரில் எலி’ - இந்திய கிரிக்கெட் அணி மீதான விமர்சனம் மீண்டும் வலுப்பெறுகிறதா?
- இஸ்கூல், நடு சென்டர் அறிவீர்களா? - வருகிறது புதிய ஆங்கிலம்: சுவாரஸ்ய பகிர்வு
- கொரோனா வைரஸ் மரணங்கள்: தென் கொரிய மதத் தலைவர் மீது கொலை வழக்கு விசாரணை
- சிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய அதிசய உயிர்ப் பாலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: