பாகிஸ்தான் விமான விபத்து: உயிர் பிழைத்தவரின் அனுபவம் - நெகிழ்ச்சி பகிர்வு

பாகிஸ்தான் விமான விபத்து: உயிர் பிழைத்தவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்தவர், தன்னால் "கரும்புகையை மட்டுமே சுற்றிலும் பார்க்க முடிந்தது" என்று கூறினார்.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் கராச்சியில் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னர் விபத்துகுள்ளானதுபோது அதிலிருந்து உயிர்பிழைத்த இருவரில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது சுபேரும் ஒருவர்.

சிந்து மாகாணத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமானத்திலிருந்த பைலட் ஒருவர் விமானத்தைத் தரையிறக்க முயன்று தோல்வியடைந்ததும் இன்னொரு பைலட் தொழில்நுட்ப கோளாறு எனப் புகார் செய்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக அமலிலிருந்த முடக்க நிலை தளர்த்தப்பட்ட பிறகு விமான சேவைகள் தொடங்கிய அடுத்த நாளே இந்த விபத்து நடந்துள்ளது.

முகமது சுபேர் மட்டும் எப்படி தப்பித்தார்?

விமான எண் PK8303, ஏ320 விமானம் லாகூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரும் ஈத் பண்டிகைக்காகச் செல்லும் பலரையும் சேர்த்து 91 பயணிகள் மற்றும் 8 விமானப்பணியாளர்கள் சென்றனர்.

பட மூலாதாரம், AFP

கராச்சி ஜின்னா விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு தரையிறங்க முயன்றது.

முதலில் ஒருதடவை தரையிறங்க முயற்சி செய்த பிறகு 10-15 நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது என சுபேர் தெரிவித்தார். இவர் சிறு காயங்களுடன் இந்த விபத்திலிருந்து தப்பித்தார்.

யாருக்கும் விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பது தெரியவில்லை. ஏனென்றால் விமானம் நன்றாக பறந்து கொண்டிருந்தது. என்கிறார் அவர்.

விபத்து நடந்ததும் அவர் தன்னுடைய சுய நினைவை இழந்துவிட்டார். அவருக்கு சுய நினைவு திரும்பியவுடன், அனைத்து பக்கங்களிலிருந்தும் அலறல்களை மட்டுமே தான் கேட்டதாக கூறியுள்ளார். "பெரியவர் சிறியவர் என அனைவரும் அலறினர். சுற்றிலும் நெருப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. மக்களை பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்களின் அலறல் சத்தம் மட்டும் கேட்க முடிந்தது." என்கிறார் சுபேர்.

என்னுடைய சீட்பெல்டை விடுவித்து ஒளிவந்த பக்கம் சென்றேன். நான் பாதுகாப்பாக இருக்க 10 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டியிருந்தது என்கிறார் சுபேர்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு தரவுகள் என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், Reuters

பாகிஸ்தான் விமானத்துறை பாதுகாப்பு தரவுகளைப் பார்த்தபோது நிறைய விமான விபத்துகளையும் பார்த்தது.

2010ல் ஆர்ப்ளூ என்ற தனியார் விமான நிறுவனம் இயக்கிய விமானம் இஸ்லாமாபாத் அருகே விபத்துக்குள்ளாகு விமானத்தில் இருந்த 152 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் நடந்த கோரமான விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

2010ல் பாகிஸ்தான் நிறுவனமான போஜா இயக்கிய போயிங் 732-200 விமானம் மோசமான வானிலை காரணமாக ராவல்பிண்டியில் தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 121 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் உயிரிழந்தனர்.

2016ல் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் வட பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு சென்ற போது நடு வானில் வெடித்து சிதறியது. இதில் 47 பேர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: