இந்திய ராணுவம் - சீன ராணுவம்: எல்லையில் யார் ஆதிக்கம்?

இந்திய ராணுவம் - சீன ராணுவம்: எல்லையில் யார் ஆதிக்கம்?

இந்தியா - சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கூட, சமூக வலைத்தளங்களில் இந்த விவாதமானது தீவிரமடைந்து வருகிறது. ஆனால் உண்மையில் இருநாடுகளில் ராணுவ அளவில் யார் பலசாலி?

1927-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீன ராணுவத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான படை வீரர்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்த சீனா, தனது வான் மற்றும் கப்பற்படைகளின் பலத்தை அதிகரித்தது. மேலும் தேவைப்படும் இடங்களில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் புகுத்த தொடங்கியது.

எல்லைப்பகுதிகளில் இருநாட்டு ராணுவம் தங்கள் நிலைகளை பல ஆண்டுகளாக வலுப்படுத்தி வந்தாலும், சீனாவே இதிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது வரை எல்லையில் 15 முக்கிய விமான தளங்களையும், 27 சிறிய விமான நிலையங்களையும் சீனா கட்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: