அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்கப் போவதில்லை - குற்றம் சுமத்தும் டொனால்ட் டிரம்ப்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

"என்ன நடக்கிறது என நாம் பார்க்க வேண்டும்," என வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர்.

புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் போட்டி வேட்பாளரான ஜோ பிடனிடம் அதிபருக்கான அதிகாரங்களை அமைதியான முறையில் வழங்குவாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று," என டிரம்ப் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்றதொரு பதிலைத்தான் அளித்திருந்தார் டிரம்ப். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்ட டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஹிலாரி அப்போது விமர்சித்திருந்தார்.

இருப்பினும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று பதவியேற்றார்.

இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், SURESH ANGADI FB

இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது.

சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் தொழிலதிபரை பதவி விலகச் செய்த பணிப்பெண்

பட மூலாதாரம், HOME/ GRACE BAEY

சிங்கப்பூரில் விதிமுறை மீறி வீட்டுப் பணிப்பெண்ணை வேறு வேலையில் ஈடுபடுத்திய செல்வந்த தொழிலதிபரின் குடும்பம் தொடர்ந்த திருட்டு வழக்கில், இந்தோனீசியாவைச் சேர்ந்த பார்த்தி லியானி என்ற பெண்ணை அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு அந்நாட்டில் வீட்டு வேலைக்கு செல்லும் குடியேறி தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணான பார்தி லியானி, மாதம் $600 (£ 345) வரை ஊதியம் பெற்றார். சிங்கப்பூரின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் அவர் வேலை செய்தார். அந்நாட்டின் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களின் தலைர் யூ மன் லியோங்தான் அவரது முதலாளி.

ஒரு நாள் வீட்டில் உள்ள பொருட்களை திருடியதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார். லியோங்கின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். அந்த வழக்கு சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆடம்பர பைகள், டிவிடி பிளேயர், ஆடைகள் போன்றவற்றை திருடியதாக பார்தி லியானி மீது குற்றம்சாட்டப்பட்டது.

சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல்

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இது அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றுக்கு, சீனா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.

இதனையடுத்து, உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "எந்த நாட்டுடனும் பனிப்போரில் ஈடுபடும் நோக்கம் சீனாவுக்கு இல்லை" என தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களால், உலகின் இந்த இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து இருக்கிறது.

உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா?

பட மூலாதாரம், EPA

கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்திகள் பரவுவது குறைந்தபாடில்லை.

அந்த வகையில், சமீப காலமாக அதிகளவில் பகிரப்பட்டு வரும் சில கூற்றுகள் குறித்த உண்மைத் தன்மையை காண்போம்.

கூற்று: அகச்சிவப்பு வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்

உண்மைத்தன்மை: இந்த கூற்று தவறானது. அகச்சிவப்பு வெப்பமானிகள் அபாயகரமானவை அல்ல.

கல்வி நிலையங்கள் முதல் அலுவலகங்கள் வரை, வணிக வளாகங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை, எங்கு சென்றாலும் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை அளவிடுவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

இந்திய விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு என்ன?

இந்திய அரசு சமீபத்தில் விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றயிருக்கும் மூன்று சட்டங்களும் பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சட்டங்கள் குறித்து, இந்தியாவில் நீண்ட காலமாக விவசாயிகளின் பிரச்சனை குறித்து எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து:

ப. இவை மிக மோசமான சட்டங்கள். இதில் ஒரு சட்டம் ஏ.பி.எம்.சி பற்றியது (APMC என்பது Agricultural Produce Market Committeeஐக் குறிக்கும். தமிழ்நாட்டில் 'தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனைச் (முறைப்படுத்துதல்) சட்டம் 1987" என்று அழைக்கப்படுகிறது). இவர்கள் இந்த ஏ.பி.எம்.சியை ஏதோ ஒரு வில்லனைப்போல, விவசாயிகளை அடிமையாக்கி வைத்திருப்பதைப் போலச் சித்தரிக்கிறார்கள். அதெல்லாம் முட்டாள்தனம். இப்போதும்கூட, பெரிய அளவிலான விவசாய விளைபொருள் விற்பனை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியில்தான் நடக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :