கரடியை தொல்லை செய்த அமெரிக்கப் பெண் மீது வழக்கு - என்ன நடந்தது?

கரடி

பட மூலாதாரம், LIGHTROCKET VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

மாதிரிப் படம்

அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் கரடியை பின்தொடர்ந்து படம்பிடித்து, அதற்கு தொந்தரவு செய்ததாக இல்லினோய் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் வட அமெரிக்க செங்கரடி இனத்தைச் சேர்ந்த ஒரு கரடி மற்றும் அதன் இரண்டு குட்டிகளுக்கு அருகில் சென்று சமந்தா டெஹ்ரிங் என்பவர் படம்பிடிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தாய் கரடி, சமந்தாவை நோக்கி ஓடி வரவே, அவர் அங்கிருந்து செல்கிறார்.

தற்போது இதற்காக சமந்தா பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

கரடிகளிடம் இருந்து 300 அடி தள்ளியிருக்க வேண்டும் என்று அங்குவரும் பார்வையாளர்களுக்கான விதி.

கடந்த மே 15ஆம் தேதி, பூங்காவிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் இந்த கரடிகளை காண நேர்ந்தது.

பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதை சமந்தா புறக்கணித்ததாகவும், கரடி அவரை துரத்தும் வரை குழு பயணித்த வாகனத்திற்கு வர மறுத்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அது யார் என்பதை கண்டறிய போலீஸார் முற்பட, சமந்தா குறித்து அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய சமூக ஊடக பக்கங்களில் கரடிகளின் புகைப்படங்கள் இருந்தன.

வன விலங்கிற்கு உணவு கொடுப்பது, தொடுவது, பயமுறுத்துவது, வேண்டுமென்றே தொந்தரவு செய்வது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :