எக்ஸ்ரே செய்யப்பட்ட வைக்கிங் யுகத்து வாள்: 9-ம் நூற்றாண்டு வரலாற்றை சொல்லும் வாய்ப்பு

வைக்கிங் கால வாள்

பட மூலாதாரம், AOC ARCHAEOLOGY

படக்குறிப்பு,

ஆர்க்னியில் கண்டெடுக்கப்பட்ட வைக்கிங் கால வாள்

ஸ்காட்லாந்தின் ஆர்க்னியில் உள்ள இடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட வைக்கிங் கால வாள், அரிதானது மற்றும் அற்புதமானது எனவும், சிக்கலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனவும், தொல்லியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.2015-ம் ஆண்டில் பாப்பா வெஸ்ட்ரேயின் வடகிழக்கு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வாள், அகழ்வாராய்ச்சிக்குப் பிந்தைய பணிகளின் ஒரு பகுதியாக கவனமுடன் ஆராயப்பட்டு வருகிறது.

இது, 9-ம் நூற்றாண்டுடன் தொடர்புடைய அதிக கனமிக்க வகையைச் சேர்ந்த வாள் என, தொல்லியல் வல்லுநர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.இந்த பழமையான வாள் மிகவும் அரித்துப் போயுள்ளது என்றாலும், வாளின் கைப்பிடி அதிக அலங்காரங்களைக் கொண்டுள்ளது, எக்ஸ்-ரே சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

தேன்கூடு போன்ற வடிவமைப்பை உருவாக்க மாறுபட்ட உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது."இந்த வாள், சொல்வதற்கு பல கதைகளைக் கொண்டிருக்கிறது" என, அதனை ஆராய்ந்துவரும் தொல்லியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.இந்த வாளின் உறையின் எச்சங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏஓசி ஆர்க்கியாலஜியைச் (AOC Archeology) சேர்ந்த ஆண்ட்ரூ மோரிசன், கேரோலின் பேட்டர்சன் மற்றும் டாக்டர் ஸ்டீபன் ஹேரிசன் ஆகியோர், இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளவை குறித்து, இன்னும் அதிக தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.

பட மூலாதாரம், AOC ARCHAEOLOGY

படக்குறிப்பு,

வாளின் எக்ஸ்ரே தோற்றம்

அக்குழு வெளியிட்ட அறிக்கையில், "கூடுமானவரை அதிக ஆதாரங்களை காப்பாற்றும் வகையில், வாள் முழுவதையும், அது கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள மண்ணுடன் பெயர்த்து, ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று, தடயவியல் சோதனை செய்யப்படும்."இது மிகவும் உடையக்கூடியதாக உள்ளது. எனவே, அதன் அடிபாகம் எப்படி இருக்கும் என்பது கூட எங்களுக்கு இன்னும் தெரியாது. எனவே, வரும் மாதங்களில் எங்களுடைய புரிதல் நிச்சயம் மாறும்."வாளில் உள்ள இரும்பு மிகவும் அரித்துள்ளது. எனவே, அதன் பல பிரமிக்கத்தக்க விவரங்கள், எக்ஸ்-ரே வாயிலாக மட்டுமே தெரியும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகழாய்வில், மிகவும் அரிதான வைக்கிங் கால புதைகுழி படகு இருந்ததற்கான ஆதாரம், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூடிய இரண்டாவது கல்லறை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.இந்த கல்லறைகள், ஆர்க்னியில் குடியமர்ந்த ஆரம்பகால நார்வே குடியேற்றவாசிகளுடையதாக இருக்கலாம் என, தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.ஏஓசி ஆர்க்கியாலஜி, இந்த ஆய்வுக்காக ஹிஸ்டாரிக் என்விராண்மெண்ட் ஸ்காட்லாந்துடன் (Historic Environment Scotland) இணைந்து பணியாற்றி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: