பிரிட்டனின் பல நகரங்களில் வன்முறை

ஏராளமான சொத்துகள் தீக்கிரையாகியுள்ளன படத்தின் காப்புரிமை AP
Image caption எரியும் கட்டிடங்கள்

மூன்றாவது இரவாக லண்டனின் பல இடங்களில் கலவரங்களும் வன்முறையும் சூறையாடல்களும் நடந்துள்ளன. பர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய ஊர்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன.

விடுமுறையில் இருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் அதனை பாதியிலேயே முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.

கலவரங்களைத் தடுக்கும் நோக்கில் இதுவரையில் லண்டனில் மட்டுமே 350க்கும் மேற்பட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 60க்கும் அதிகமானோர் மீது முறையான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டனின் வடமேற்கிலுள்ள பிரெண்ட் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக்கொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் மீது காரை விட்டு மோதிய இளைஞர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பர்மிங்ஹாமிலும் இளைஞர் கும்பல்கள் கடைத்தெருவில் அட்டூழியம் செய்திருந்தனர். கடைகளின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து சென்று கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடுவதில் அவர்கள் ஈடுபட்டனர். அங்கே 100 இளைஞர்கள் வரை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்நகரின் ஹாண்ட்ஸ்வொர்த் பகுதி காவல் நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மான்செஸ்டர் நகரில் இளைஞர்கள் கார்களை அடித்து உடைப்பதில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிவர்பூல் நகரத்திலும் முகத்தை மூடி மறைத்துக்கொண்டு திரியும் சுமார் 200 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சொத்துக்களை சேதமாக்கியதாக பொலிசார் கூறினர்.

நாட்டிங்ஹம்ஷைர் மாவட்டத்தில் செயிண்ட் அன் பகுதியிலும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை BBC World Service

இந்தச் செய்தி குறித்து மேலும்