அமெரிக்காவில் தேர்தல் பிரச்சார சூறாவளி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 நவம்பர், 2012 - 16:32 ஜிஎம்டி
ஒபாமா-ரொம்னி

அமெரிக்க அதிபர் தேர்தலின் கடைசி பிரச்சார நாளில் சூறாவளி சுற்றுப் பயணத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 24 மணி நேரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் கடைசி நிமிட பதைபதைப்பு கலந்த பரபரப்பில் இருக்கிறது.

கருத்துக் கணிப்புகள் எல்லாம், வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய சம நிலையில் இருப்பதாகக் காட்டி வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் நாட்டின் ஸ்விங் ஸ்டேட்ஸ் அல்லது வாக்களர்கள் எந்தப்பக்கம் சாய்வார்கள் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை இருக்கும் மாநிலங்களில் கடைசி நாள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒலி வடிவில்

பரபரப்புடனும் பதைபதைப்புடனும் கடைசி நாள் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலின் கடைசி நாள் பிரச்சாரத்திலே, முடிவு மாறக்கூடிய இடங்களில் அதிபர் ஒபாமாவும், மிட் ரொம்னியும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஞாயிறு இரவு அதிபர் ஒபாமா இது போன்றதொரு போர்க்கள மாநிலமான ஒஹையோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றினார்.

முன்னதாக ஒபமா, புளோரிடா, நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் கொலராடோ ஆகிய முக்கிய மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்தார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாள்ர் மிட் ரொம்னியும் ஞாயிறு இரவு ஒஹையோ மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்தார்.

பென்சில்வேனியாவில் பேசுகையில், குடியரச் கட்சி வாக்காளர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை கட்டாயமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

2000ஆம் ஆண்டு நடந்து உச்சநீதிமன்ற வழக்கு வரை சென்ற புஷ்-அல்கோர் மோதல் போல மீண்டும் ஒரு நிலை மீண்டும் தற்போது உருவாகலாம் என்ற ஒரு அச்சமும் எழுந்துள்ளது.

வழக்குகள்

புஷ் அல் கோர் மோதலுக்கும் சட்ட சர்ச்சைக்கும் வழி வகுத்த அதே புளோரிடா மாநிலத்தில், இரு கட்சிகளிடையேயும் இப்போது மீண்டும் ஒரு வழக்கு எழுந்துள்ளது.

குடியரசுக் கட்சி ஆளும் இந்த மாநில அரசு, வாக்காளர்கள் முன்கூட்டியே வந்து நேரில் வாக்களிக்கும் முறையை கடந்த சனிக்கிழமையோடு நிறுத்திய முடிவை எதிர்த்து ஜனநாயகக் கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதேபோல மற்ற்மொரு போர்க்கள மாநிலமான ஒஹையோவில், குடியரசுக் கட்சி தலைமை தாங்கும் மாநில அரசு, ப்ரொவிஷனல் பேலட்ஸ் எனப்படும் தற்காலிக வாக்குகளைப் பதிவுசெய்ய கொண்டுவந்த அடையாள ஆவணம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் வாக்கு செல்லாது என்று அறிவித்துள்ள முடிவை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதற்கு முன்னரே சட்டச் சர்ச்சைகள் தோன்றியிருக்க, தேர்தல் முடிவுகளும் மிக நெருக்கமாக அமையும் பட்சத்தில், மேலும் சட்டரீதியான குழப்பங்கள் ஏற்படும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.