உலக நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 டிசம்பர், 2012 - 11:19 ஜிஎம்டி

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 • உலகெங்குமாக நத்தார் பண்டிகையை கிறிஸ்தவர்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
 • மத்தியகிழக்கின் மேற்குக்கரையில் உள்ள ஏசு கிறிஸ்து பிறந்த ஊரான பெத்லெஹெத்தில் விசேட பூசைகள் நடந்துள்ளன.
 • பெத்லெஹெத்தில் உள்ள பிறப்பட தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.
 • பெத்லெஹெம் நகர மையத்தில் பைப் வாத்திய இசைக்கலைஞர்களின் அணிவகுப்பும் நடந்தது.
 • வத்திகானத்தின் செயிண்ட் பீட்டர் பஸிலிகா தேவாலயத்தில் விசேட பூசையை நடத்திய போப்பாண்டவர், உலகத்தில் அமைதி நிலைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.
 • பிரிட்டனில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த உதவியர்களுக்கு தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் மஹாராணி எலிசபெத் நன்றி தெரிவித்துள்ளார்.
 • கோப்டிக் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழக்கூடிய எகிப்தில் நத்தார் திருப்பலி பூசை ஒன்று.
 • சீனாவில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்று. அந்நாட்டில் 7 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.
 • இராக்கின் கிறிஸ்தவர்கள் மோசுல் நகரில் இவ்வாறாக கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள்.
 • முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்தோனேஷியாவில், பெரும் அரங்கத்தில் திருப்பலி பூசை நடத்தப்பட்டு நத்தார் கொண்டாடப்பட்டது.
 • துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்ட அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்து நியூடவுன் நகரில் நத்தார் கொண்டாட்டம் எதுவும் இல்லை. நினைவஞ்சலி நிகழ்ச்சியாகவே அது அமைகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.