புதையல் தேடியவருக்குக் கிடைத்த தங்கக் கட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஜனவரி, 2013 - 17:14 ஜிஎம்டி
ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டி

ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டி

ஆஸ்திரேலியாவில் மெட்டல் டிடெக்டரின் துணையோடு புதையல் தேடியலைந்த ஒருவருக்கு 5 கிலோ தங்கக் கட்டி கிடைத்துள்ளது.

சுமார் ஐந்தரை கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டியின் விலை 3 லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதுவரை பெயர் வெளியிடப்படாத ஒரு நபர், விக்டோரியா மாகாணத்தில் பாலார்ட் என்ற நகருக்கருகே கையில் எடுத்துப் போகக் கூடிய மெட்டல் டிடெக்டர் மூலம் நடத்திய தேடுதலின் போது தரைக்குக் கீழே இரண்டடி ஆழத்தில் ஒரு உலோகக் கட்டி இருப்பதை ''பீப்'' ஒலி உணர்த்தியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் சூடுபிடித்த தங்க வேட்டையின் போது, இந்த இடம் தங்கம் தேடுவோர் மத்தியில் பிரபலமாக இருந்ததது.

சமீப காலத்தில் இங்கு எடுக்கப்பட்ட மிகப் பெரிய தங்கக் கட்டி இதுதான் என்று உள்ளூர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.