மாலியின் திம்புக்டு நகரை நோக்கி பிரஞ்சுப் படைகள் முன்னகர்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஜனவரி, 2013 - 11:06 ஜிஎம்டி
பிரஞ்சுப் படைகளின் யுத்த வாகனத் தொடரணி

பிரஞ்சுப் படைகளின் யுத்த வாகனத் தொடரணி

மாலியில் பிரஞ்சு- தலைமையிலான படைகள் முக்கிய வடக்கு நகரான திம்புக்டுவை நோக்கி முன்னேறிவருகின்றன. இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான படைநடவடிக்கை அங்கு தீவிரமடைந்துவருகிறது.

நேற்று சனிக்கிழமை மாலி மற்றும் பிரஞ்சுப் படைகள் மற்றொரு முக்கிய நகரான காவோ-ஐ கைப்பற்றியிருந்தன.

மாலிக்கு மேலும் படைகளை அனுப்புவது பற்றி ஆபிரிக்க யூனியன் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த முன்னேற்றப் படைநகர்வு நடக்கிறது.

மாலியின் வடபிராந்தியத்தை இஸ்லாமிய ஆயுததாரிகள் கடந்த ஆண்டில் கைப்பற்றியிருந்தார்கள். ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பிரஞ்சுப் படைகள் படைநடவடிக்கையை ஆரம்பித்தது முதல் அவர்கள் குறித்தப் பிரதேசங்களைக் கைவிட்டு பின்வாங்கியுள்ளனர்.

ஆயுததாரிகள் பாலைவனங்களில் உள்ள மறைவிடங்களை நோக்கி தப்பிச் சென்றுவிட்டார்கள். பெரும்பாலான நகரங்கள் அரச ஆதரவு படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர், ஆயுததாரிகளை தேடியழிப்பது அரச படைகளுக்கு சிரமமான காரியமாகவே இருக்கும் என்று தலைநகர் பமாகோவில் இருக்கின்ற பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.