மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 பிப்ரவரி, 2013 - 13:05 ஜிஎம்டி
மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்

மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்

மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திம்பக்டு நகருக்கு சென்றிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரஞ்சு மற்றும் மாலி படைகளால் 6 நாட்களுக்கு முன்னர் தான் திம்பக்டு நகர் கைப்பற்றப்பட்டது.

ஒரு நாள் விஜயமாக மாலி சென்றுள்ள அதிபர் ஒல்லோந்துடன் பிரான்ஸின் மூத்த அமைச்சர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் வடக்கு மாலியின் பிராந்தியங்களைக் கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சில் கடந்த மூன்று வாரங்களாக படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுப் படைகளை பாராட்டுவதற்காகவே அதிபர் ஒல்லோந்த் மாலி சென்றுள்ளார்.

மாலிக்கு புறப்படும் முன்னதாக கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்த், மாலிக்குள் ஆபிரிக்கப் படைகளை அனுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அங்கு இடைக்கால அரசாங்கத்தின் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்றும் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.