மலாலா கதை புத்தகமாகிறது

தலிபான்களால் கடந்த ஒக்டோபரில் தலையில் சுடப்பட்டு, உயிர் தப்பிய பாகிஸ்தானிய மாணவியான 15 வயதான மலாலா யூசப்சாய் ஒரு புத்தகத்துக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் பெறுமதியானது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சம்பவங்களை மையமாகக் கொண்டு தனது நினைவலைகளை அவர் மீட்டுவார்.

அது அவரது சொந்தக் கதையாக மாத்திரமல்லாமல், அங்கு கல்வி மறுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான பெண் குழந்தைகளின் கதையாகவும் இருக்கும்.

அவரும் அவரது குடும்பமும் இப்போது பேர்மிங்ஹாமில் வசிக்கிறார்கள். அங்கு அண்மையில்தான் மலாலா அங்கு பள்ளிக்கூடத்தில் மீண்டும் சேர்ந்தார்.