மெக்சிகோ : அரசியல் அலுவலகங்களை தாக்கிய ஆசிரியர்கள்

  • 25 ஏப்ரல் 2013

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் ஆத்திரமடைந்த ஆசிரியர்களின் குழு ஒன்று குவெரெரோ மாநிலத்தின் தலைநகர் சில்பசிங்கோவில் பல அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களை எரித்திருக்கிறது.

கோடாரிகள் மற்றும் தடிகள் சகிதம் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செனட்டரின் அலுவலகங்களை தாக்கி கணினிகளை வெளியே வீசியிருக்கிறார்கள்.

மாநில நாடாளுமன்ற கட்டிடத்தை பல நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாத்து வருகிறார்கள்.

அண்மைய கல்வி சீர்திருத்தம் மீளப்பெறப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோருகிறார்கள்.

இந்தச் சீர்திருத்தத்தின்படி ஆசிரியர்கள் சில தொழில்சார் பரீட்சைகளை எழுதியாக வேண்டும்.

இது பணம் கொடுத்து ஆசிரியர் பணியைப் பெறும் ஊழலை ஒழிக்கும் நோக்கிலானது.