ஸ்பெயினில் 60 லட்சம் பேருக்கு வேலையில்லை

  • 25 ஏப்ரல் 2013

ஸ்பெயினின் வேலையில்லா திண்டாட்ட வீதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அங்குள்ள வேலை செய்யக்கூடியவர்களில் 27 வீதத்தினர் அதாவது 60 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த விபரங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கு உரியவையாகும்.

5 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஸ்பெயினின் பொருளாதாரம் தடுமாறுகிறது என்பதனையே இது காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அங்கு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து கடுமையான கோபம் காணப்படுகிறது.

அந்த சிக்கன நடவடிக்கைகள்தான் நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

வியாழனன்று பிற்பகல் ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்றத்துக்கு முன்பாக நடக்கவிருக்கும் பெரும் ஆர்ப்பாட்டத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக மட்ரிட்டில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.