திபெத் : இரு பிக்குமார் தீக்குளிப்பு

  • 25 ஏப்ரல் 2013

சீனாவின் தென்பகுதியில் இரு திபெத்திய பிக்குமார் தமக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்ததாக திபெத்திய செயற்பாட்டு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

திபெத்திய பீடபூமிக்கு அருகே சிச்சுவான் மாகாணத்தில் தமது மடாலயத்தில் உள்ள மண்டபத்தில் அவர்கள் இதனைச் செய்ததாக லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும், திபெத்திய விடுதலைக்கான அமைப்பு கூறியுள்ளது.

அண்மைய வருடங்களில் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளின் குவியமாக இந்த மடாலயம் திகழ்ந்துவருகிறது.

அந்தப் பிராந்தியத்தில் சீனா ஒரு பெரும் பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டது.

சீனாவின் அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான தமது போராட்டமாக 2011 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கும் அதிகமான திபெத்திய பிக்குகள் தீக்குளித்துள்ளார்கள்.