கிடுகிடுவென உயர்கிறது சாம்சங் வருமானம் !

  • 26 ஏப்ரல் 2013
குறைந்த சந்தைப்படுத்தல் செலவும் அதீத ஸ்மார்ட்ஃபோன் விற்பனையுமே வருமானத்துக்கு காரணம்
Image caption குறைந்த சந்தைப்படுத்தல் செலவும் அதீத ஸ்மார்ட்ஃபோன் விற்பனையுமே நிகர வருமான அதிகரிப்புக்கு காரணம்

மின்னணு பொருள் (இலக்ட்ரோனிக்ஸ்) தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டிள் முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் 6 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 40 வீத வருமான அதிகரிப்பு.

வருமானத்தில் வளர்ச்சியைக் காட்டும் சாம்சங் நிறுவனத்தின் 6வது தொடர்ச்சியான காலாண்டு இது.

ஸ்மாட்ஃபோன்ஸ் எனப்படும் நவீனரக கைத்தொலைபேசி விற்பனையில் ஏற்பட்டுள்ள அதீத அதிகரிப்பும் குறைந்த சந்தைப்படுத்தல் செலவுமே இதற்குக் காரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில், சாம்சங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் கடந்த பத்தாண்டுகளில் முதற்தடவையாக அதன் வருமானத்தில் வீழ்ச்சியைக் காட்டியமை குறிப்பிடத்தக்கது.