இராக் : அல்ஜசீரா உட்பட 10 செய்மதி தொலைக்காட்சிகளுக்கு இடைக்காலத்தடை

  • 28 ஏப்ரல் 2013

ஷியா- சுன்னி பிரிவினையையும் வன்செயல்களையும் தூண்டுவதாகக் கூறி 10 தொலைக்காட்சி சேவைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை இராக்கிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

இதன் மூலம் இந்த தொலைக்காட்சி சேவைகள் இராக்கில் செயற்பட முடியாது என்பதுடன், அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்கவும் முடியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராக் எங்கிலும் அவர்கள் சென்றுவரவும் முடியாது.

தடை செய்யப்பட்ட தொலைக்காட்சிகளில் அல்ஜசீரா தொலைக்காட்சியும் அடங்குகிறது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அது மறுத்துள்ளது.

இராக்கில் அண்மைய வன்செயல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவை குறித்து கருத்துக் கூறியிருந்த பிரதமர் நூரி அல்மலிக்கி அவர்கள், இராக்கில் ஷியாக்களுக்கும் சுன்னி இனத்தவருக்கும் இடையே வகுப்புவாத வன்செயல்கள் அதிகரித்துவருவதாக எச்சரித்துள்ளார்.