வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல், 8 பேர் பலி

  • 29 ஏப்ரல் 2013
Image caption இலக்கு அரசியல்வாதிகள், பலியானவர்கள் பொதுமக்கள்

வடமேற்கு பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த குண்டுதாரி, பெஷாவர் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாண்டியவுடன் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் உள்ளூர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே பலியாகி காயமும் அடைந்துள்ளனர்.

அடுத்த மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வடமேற்கு பகுதியில் குண்டுத் தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

மதச்சார்பற்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களே தமது திட்டமிட்ட இலக்கு என்று தாலிபான்கள் கூறுகிறார்கள்.

இப்படியான நிலைப்பாடு அப்பகுதியில் அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதை ஆபத்துகள் நிறைந்ததாக்கியுள்ளன.