குடித்துத் தள்ளிய ஸ்டாலினும் சர்ச்சிலும்

ஜேர்மனியுடன் போர் நடத்துவது குறித்து பேசச் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் விடிய விடிய குடித்துத் தள்ளினார்களாம்.

1942ஆம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் மாஸ்கோவுக்கு சென்றபோதுதான் இது நடந்திருக்கிறது. அதாவது அதிகாலை 3 மணிவரை இருவரும் குடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

லண்டனின் வெளியுறவு அமைச்சின் பழைய கடிதம் ஒன்றில் இருந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டில் காணப்படும் களிப்பில் இவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.

உண்மையில் ஸ்டாலினின் உபசரிப்பில் சர்ச்சில் மூழ்கிக் கிடந்திருக்கிறார்.

சர்ச்சிலுக்கு சிறிது தலைவலி என்று அவர் அதிகாலை ஒரு மணியளவில் கூறியிருகிறார். ஆனாலும் 3 மணிவரை குடி தொடர்ந்திருக்கிறது. போதாதற்கு வகை வகையான உணவுகள் வேறாம்.

ஸ்டாலின் எப்போதும் தனது விருந்தாளிகளை நிறைய மதுப்போத்தல்களுடந்தான் வரவேற்பாராம். நிறைந்தபோதையில் சமரசம் பேச அவருக்கு நிறைய விருப்பமாம்.

போதையில் இருந்த இவர்களுக்குள் மொழிபெயர்ப்பு செய்வதுதான் அதிகாரிகளுக்கு சிரமமாகப் போய்விட்டதாம்.

அதிகாலை 3 மணிக்கு இந்த மது விருந்து முடிய அதிகாரிகள், 4.15க்கு விமான நிலையத்துக்கு ஓடவேண்டியிருந்ததாம்.

பனிப்போர் காலத்தின் முற்பகுதி, மற்றும் இரண்டாம் உலகப் போர் காலகட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 600 ஆவணங்களுள் இந்தக் கடிதமும் இருந்திருக்கிறது.