காசுக்குத் தாய்ப்பால்: பிரஞ்சு பெண் விளம்பரம்

  • 6 ஆகஸ்ட் 2013
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை
Image caption தாய்ப்பால் குடிக்கும் குழந்தை

தம்பதிகளாக வாழும் ஒருபால் உறவுக்கார ஆண்களின் வசதிக்காக – அவர்களின் தத்துக் குழந்தைகளுக்கு, கட்டணம் வாங்கிக் கொண்டு தாய்ப் பால் கொடுக்க பிரஞ்சு பெண் ஒருவர் முன்வந்துள்ளார்.

ஆரோக்கியமானவர், தாதியாகத் தேர்ச்சி பெற்றவர் என்று இணையத்தில் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ள அந்த 29 வயதான பெண், ஒரு நாளைக்கு 130 டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்தால் தாய்ப் பால் கொடுக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே பலர் தன்னை அணுகியுள்ளதாகவும் அந்தப் பெண் கூறுகிறார்.

பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த உணவாக மருத்துவர்களால் தாய்ப் பால் பரிந்துரைக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்புதான், ஒருபால் உறவுக்காரர்களிடையில் திருமணத்தையும், அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் பிரான்ஸ் சட்டரீதியாக அங்கீகரித்தது.

ஆனால் அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உதவி செய்வதும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் அங்கு இன்னும் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படவில்லை.