'தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் தடை செய்யப்பட்டவை'

Image caption 'தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டவை அல்ல'

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினரைத் தனிமைப்படுத்தும் முயற்சியொன்றில் , சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் குழு ஒன்று, தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கெதிராக கருத்துத் தெரிவித்துள்ளது.

ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த மாநாடொன்றில் பேசிய இந்த அமைப்பினர், தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினர்.

ஆப்கானிய அரசு தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடொன்றை எட்ட முயன்று கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அரசு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கெதிராக மத ஆணை ( பாத்வா) ஒன்றைப் பிரகடனம் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.