போர்க்குற்றம்: இன்னொரு பங்களாதேஷ் அரசியல்வாதிக்கு மரண தண்டனை

  • 1 அக்டோபர் 2013
Image caption சலாலுதீன் காதர் சௌத்ரி-- மரண தண்டனையை எதிர்நோக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்

பங்களாதேஷில் இன்னொரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர், சலாலுதீன் காதர் சௌத்ரி, 1971ல் நாடு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்த குற்றம் புரிந்ததாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை அவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இந்த சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் இவர்தான்.

தனது கணவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று சௌத்ரியின் மனைவி கூறினார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் அவாமி லீக் அரசால் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்ற விசாரணைகள் குறைபாடுகளைக் கொண்டவை என்று மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்திருக்கின்றன.

இந்தத்தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும், சிட்டகாங் மாவட்டத்தில் இருக்கும் அவரது தொகுதியில் , இணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.