ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் புதிய தலைவர் பில் ஷோர்ட்டன்

Image caption கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் நடந்த வாக்குப் பதிவிலும் பில் ஷோர்ட்டன் வெற்றிபெற்றுள்ளார்

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பெருந்தோல்வியைச் சந்தித்த தொழிற்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

முன்னாள் கல்வியமைச்சர் பில் ஷோர்ட்டன் தொழிற்கட்சியின் புதிய தலைவராகியுள்ளார்.

வழமையில் தொழிற்கட்சியின் செனட்டர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் கலந்துகொள்வார்கள்.

ஆனால் முதற்தடவையாக, இம்முறை புதிய தலைவர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களாலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தொழிற்கட்சியின் அரசியல்வாதிகள் மத்தியில் ஷோர்ட்டனுக்கே அதிக ஆதரவு இருந்துள்ளது.

மற்றைய வேட்பாளரான அந்தனி அல்பனேஸுக்கு கட்சியின் நிர்வாக அதிகாரிகள் மத்தியில் ஆதரவு இருந்தமை குறிப்பிடத்தக்கது.