''ஆடம்பர ஆயர்'' பதவிவிலகக் கோரிக்கை

''ஆடம்பர ஆயர்''
Image caption ''ஆடம்பர ஆயர்''

அதிகப்படியான செலவுகளுக்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் ஜேர்மனிய ஆயர் ஒருவர், தனது எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக வத்திக்கானுக்கு சென்றிருக்கிறார்.

ஜேர்மனிய ஊடகங்களால் ''ஆடம்பர ஆயர்'' என்று வர்ணிக்கப்படும் பிரான்ஸ் பீட்டர் தெபர்ட்ஸ் வான் எல்ஸ்ட் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொள்கிறார்.

லிம்பர்க்கில் உள்ள தனது புதிய வதிவிடத்தில் அளவுக்கு அதிகமாக செலவு செய்தமை குறித்து பொய் சொன்னதாகவும், இந்தியாவில் ஏழைச் சிறார்களை பார்வையிடுவதற்காக முதல் வகுப்பில் விமானத்தில் சென்றதாக வந்து கூற்றுக்களை மறுக்க சத்தியப் பிரமாணத்தில் பொய் சொன்னதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தான் எந்த விதமான குற்றமும் செய்யவில்லை என்று அந்த ஆயர் கூறுகிறார்.